Bigg Boss: அநாகரீக செய்கை.. விக்கல்ஸ் விக்ரமிடம் எல்லை மீறிய சான்ட்ரா.. இது இந்த வார பஞ்சாயத்து VJS!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 , ஆறு வாரங்களைக் கடந்து 7வது வாரத்தில் உள்ளது. இதுவரை கடந்து வந்த சீசன்களிலேயே இந்த சீசன் தான் தி பெஸ்ட் சீசன் என்று சொன்னால், அதை பிக்பாஸ் குழுவினரே நம்ப மாட்டார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. 50வது நாளை இந்த சீசன் நெருங்கிக் கொண்டு உள்ளது. ஆனால் இவர்தான் இந்த சீசனின் வெற்றியாளராக மாற வாய்ப்புகள் உள்ளது என்ற எண்ணத்தை எந்த போட்டியாளரும் உருவாக்கவில்லை. வாரா வாராம் போட்டியாளர்களுக்கு நன்னடத்தை வகுப்பு எடுப்பதே விஜய் சேதுபதியின் முதன்மையான வேலையாக இருக்கிறது. அப்படி இந்த வார கடைசியில் விஜய் சேதுபது நன்னடத்தை வகுப்பு எடுக்க வேண்டியது என்றால் அது சான்ட்ரா எமிக்குத்தான்.

இந்த வாரம் பிக் பாஸ் தரப்பில் கொடுக்கப்பட்டது ஃபன் டாஸ்க் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது இந்த சாம்பார் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த, சான்ட்ரா எமி அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். இவரது தலைமையில் அவரது அணி ஃபன் கொடுத்தார்களா என்றால், அதற்கு தொடக்கத்தில் முயற்சித்தார்கள். அதன்பின்னர் கடுப்பாகி அதை விட்டுவிட்டார்கள்.

சாம்பார் ஸ்குவாட் அணியினர் கடுப்பாகவும் முக்கிய காரணம் அவர்களுக்கு மற்ற அணியினர், அது வேண்டும், இது வேண்டும் என்று சமையலிலேயே அதிகம் வேலைப்பழுவை கொடுத்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் இந்த வாரம் முழுவதும் சமைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்ற எண்ணத்திற்கு சாம்பார் ஸ்குவாட் அணியினர் சென்றிருக்கலாம். இவ்வளவு வேலைப்பழுவுக்கு மத்தியில் அவர்கள் ஃபன் கொடுக்க ஏதாவது முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைவிடுத்து தங்களது கோபத்தை முன்னிலைப் படுத்துவதிலேயே கவனத்தைச் செலுத்தி விட்டனர்.

Will Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Discuss Sandra Indecent Behavior and Body Language To Tease Vikkals Vikram
Photo Credit:

சான்ட்ரா & பிரஜன்: இப்படி இருக்கும்போது, இந்த வாரத்தில் வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் கொடுத்தவர்கள் என்று சான்ட்ரா மற்றும் திவ்யாவைத் தேர்வு செய்தார்கள். இவர்களை சிறையில் அடைப்பதற்கு முன்னர், வீட்டில் உள்ள மற்ற வேலைகளை எல்லாம் செய்துவிட்டு செல்லச் சொன்னார் பிக்பாஸ். இவர்களிடம் வேலை வாங்கும் பொறுப்பை விக்கல்ஸ் விக்ரமிடம் கொடுத்தார் பிக்பாஸ். இப்படி இருக்கும் போது, விக்கல்ஸ் விக்ரம் சான்ட்ராவுக்கு வேலைகள் கொடுத்தார். இதற்கிடையில் சான்ட்ராவும் பிரஜனும் கணவன் மனைவியாக தான் இணைந்து இந்த ஆட்டத்தை ஆடி வருகிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு பிரஜன் தனது கருத்தைத் தெரிவிக்கும் போது, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார். தொடர்ந்து விக்ரம், சான்ட்ரா மற்றும் பிரஜனுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.

அநாகரீக உடல்மொழி: அப்போது சான்ட்ரா, " கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் என்று கூறுகிறார். உடனே, விக்கல்ஸ் விக்ரமோ, எனக்கு வாய் சரியில்லை என்று கூறுகிறார். உடனே சான்ட்ராவோ, தெரிந்தால் சரி, உங்களுக்கு புத்தி சரியில்லை என்று தெரிந்தால் சரி. வாய் மட்டும் இல்லை இங்கேயும் சரியில்லை என்று அநாகரீக சைகை காட்டுகிறார். சான்ட்ராவின் இந்த அநாகரீக சைகை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது.

கேள்வி எழுப்புவாரா விஜய் சேதுபது?: அதேபோல் சான்ட்ராவைப் பார்த்து, விக்கல்ஸ் விக்ரம் அநாகரீக செய்கை செய்திருந்தால், பிக்பாஸ் குழுவினர் அமைதியாக இருந்திருப்பார்களா என்பது கேள்விக்குறி தான். ஏன், நாங்கள் இருவரும் தனி தனி பிளேயர்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பிரஜன் அமைதியாக இருந்திருப்பாரா என்பதும் கேள்விக்குறிதான். விக்கல்ஸ் விக்ரம் இந்த வாரத்தில் நாமினேஷனின் போது சான்ட்ரா மற்றும் பிரஜனை நாமினேட் செய்யும் போது சொன்ன காரணம் சரியான காரணம்.

Will Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Discuss Sandra Indecent Behavior and Body Language To Tease Vikkals Vikram
Photo Credit:

சீனியர் சீர்திருத்த நிகழ்ச்சி: பிக்பாஸ் வீட்டிற்குள் யாருக்குமே கிடைக்காத எமோஷனல் பாண்ட், அவர்கள் இருவருக்கும் கிடைத்துவிடுகிறது. இதை கேள்வி எழுப்பியதற்கு விக்கல்ஸ் விக்ரம் மிரப்பட்டுகிறார், அவரை நோக்கி அநாகரீக சைகைகள் செய்யப்படுகிறது. இதை இந்த வாரம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது. பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்துகள் இருப்பது வாடிக்கையானது தான். ஆனால் வாரா வாராம் நன்னடத்தை வகுப்புகளாகவே வீக் எண்ட்கள் இருந்தால் என்ன ஆவது என்ற கேள்வி எழுகிறது. ஒருவருக்கு சொல்லிவிட்டால் அது மொத்த வீட்டுக்குமானது என்ற எண்ணம் எந்த போட்டியாளருக்குமே இல்லையோ என்ற எண்ணத்தை போட்டியாளர்கள் உருவாக்குகிறார்கள். வேண்டுமானால் சீனியர் சீர்திருத்த ரியாலிட்டி ஷோ என்று டேக் லைன் கூட சேர்த்துக் கொள்ளலாம். டோட்டலி அப்செட் & டிசப்பாயின்ட்மெண்ட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X