ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா பிக் பாஸ்?
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யாவின் ஆசையை பிக் பாஸ் நிறைவேற்றி வைப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் ஐஸ்வர்யா ஒரு முறை நாமினேட் செய்யப்பட்டார். அப்பொழுது வீட்டின் தலைவியாக இருந்த யாஷிகாவுக்கு யாரையாவது காப்பாற்றும் அதிகாரம் அளித்தார் பிக் பாஸ்.
இதையடுத்து யாஷிகா தனது தோழியான ஐஸ்வர்யாவை காப்பாற்றினார்.

நாமினேஷன்
ஐஸ்வர்யா இதுவரை நாமினேஷனுக்கு வரவே இல்லை என்று சக போட்டியாளர்கள் கமலிடம் கடந்த வாரம் புகார் தெரிவித்தனர். இத்தனை நாட்களாக பார்வையாளர்களும் இதே புகாரை தான் தெரிவித்து வந்தனர். இதை பார்த்த பிக் பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனுக்கு அனுப்புவது போன்று அனுப்ப முடிவு செய்தார்.

ரித்விகா
ஐஸ்வர்யாவை இந்த வாரம் நாமினேட் செய்துள்ளனர். ஐஸ்வர்யாவை மேரி பச்சா, பேட்டி, பேட்டா என்று கொஞ்சும் மும்தாஜே நாமினேட் செய்தது தான் ஹைலைட். ஐஸ்வர்யா முன்பு நாமினேட் ஆன போது யாஷிகா தான் வீட்டின் தலைவி. தற்போதும் யாஷிகா தான் தலைவி. பிக் பாஸ் பவர் கொடுப்பார் நான் உன்னை காப்பாற்றிவிடுகிறேன் என்று அவர் நேற்றே ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார்.

யாஷிகா
ஐஸ்வர்யாவை இந்த வாரம் நாமினேட் செய்ய முடிவு செய்து அதன் பிறகே யாஷிகாவை தலைவியாக்கியுள்ளார் பிக் பாஸ். போட்டியாளர்கள் நாமினேட் செய்வார்கள் நீங்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடுங்கள் என்று பிக் பாஸ் யாஷிகாவிடம் ஏற்கனவே ஸ்க்ரிப்ட் கொடுத்துவிட்டார் போன்று. யாஷிகாவும் பிக் பாஸ் சொன்னபடியே நடக்கிறார்.

வாக்கு
ஐஸ்வர்யாவை வெளியேற்ற ஓட்டு போட்டாலும் அதை செல்லா ஓட்டுகளாக்கி பிக் பாஸ் அவரை காப்பாற்றிவிடுவார் என்று பார்வையாளர்களும் குமுறகிறார்கள். இதை எல்லாம் தாண்டி பிக் பாஸ் ஐஸ்வர்யாவை வெளியேற்றினால் அது உலக அதிசயம் தான். அந்த அதிசயம் இந்த வாரம் நடக்குமா?. அடுத்த வாரம் வெளியே சந்திக்கிறேன் என்று டேனியிடம் கூறிய ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா பிக் பாஸ்?


Click it and Unblock the Notifications











