சினேகனுக்கு நடந்த அதே பரிதாபம் ஜனனிக்கும் நடக்குமா?: நிச்சயம் நடக்கும்
சென்னை: ஜனனிக்கும் சினேகன் நிலைமை வராமல் இருந்தால் சரி.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் இன்று ஒருவர் வெளியேற்றப்படுகிறார். அந்த ஒருவர் நிச்சயமாக ஐஸ்வர்யாவாக இருக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் தான் ஜனனிக்கும் சினேகன் மாதிரி ஆகிவிடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

ஜனனி
டிக்கெட் ஃபார் ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்ற ஜனனிக்கு கோல்டன் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனனி இதில் வெற்றி பெறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கை நடுங்காமல் தில்லாக இருந்த யாஷிகா தோற்றுப் போனது ஆச்சரியமே. இந்த டாஸ்கில் யாஷிகா தான் வெற்று பெறுவார் என்று நினைத்ததாக கமல் கூட கூறினார்.

கமல்
கோல்டன் டிக்கெட் கிடைத்த பிறகு தான் பொறுப்பு இன்னும் ஜாஸ்தியாகியுள்ளதாக ஜனனி கமலிடம் தெரிவித்தார். கோல்டன் டிக்கெட் இறுதி வாரத்திற்கு கொண்டு போய் விட்டுள்ளதே தவிர இது வெற்றிக்கான அறிகுறி இல்லை என்று கமல் ஜனனிக்கு நினைவூட்டினார். இதையடுத்து கடந்த சீசனில் கோல்டன் டிக்கெட் வாங்கிய சினேகன் தனது அனுபவத்தை பகரிந்து கொண்டார்.

சினேகன்
எனக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்த பிறகு பயம் வந்துவிட்டது. கோல்டன் டிக்கெட் கிடைத்த திமிரில் விளையாடாமல் இருக்கிறான் என்று மக்கள் நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் அதற்கு பிறகு தான் நான் தீவிரமாக விளையாட ஆரம்பித்தேன். இனிமேல் தான் நீ வேகமாக விளையாட வேண்டும் என்று ஜனனிக்கு அறிவுரை வழங்கினேன் என்று கமலிடம் தெரிவித்தார் சினேகன்.

தலைவர்
எனக்கும், சினேகனுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. அவர் முதல் சீசனில் வீட்டின் முதல் தலைவராக இருந்தார். நானும் அப்படித் தான். அவரையடுத்து எனக்கு கோல்டன் டிக்கெட் கிடைத்துள்ளது என்று பெருமையாக கூறினார் ஜனனி. இதை கேட்ட சினேகனோ, நீ ரன்னர் ஆகாமல் வின்னர் ஆக வாழ்த்துக்கள் என்றார். ஆனால் ஐஸ்வர்யா இருக்கும் வரை ஜனனி வின்னர் ஆவது கஷ்டமாச்சே சினேகன்.

105 நாட்கள்
கோல்டன் டிக்கெட் கிடைத்துவிட்டது என்று மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என்று கமல் ஹாஸன் ஜனனியை மீண்டும் மீண்டும் எச்சரித்தார். நீங்கள் சீரியஸாக விளையாடினாலே டைட்டில் கிடைப்பது கஷ்டம் இதில் மெத்தனமாக இருந்தால் அவ்வளவு தான் ஜனனி. கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசன் 105 நாட்கள் நடக்கும் என்பதையும் நினைவூட்டினார் கமல்.


Click it and Unblock the Notifications











