ஒருவேளை இன்னைக்கு குறும்படம் இருக்குமோ?அததான் கமல் இப்படி சொல்றாரோ?
Recommended Video
சென்னை: இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். மேலும் இந்த வாரம் எவிக்ஷன் காப்பாற்றப்படுவது யார் என்பது குறித்தும் கமல் அறிவிப்பார்.
பலருக்கு குறும்படமும் போட்டு முகத்திரையையும் கிழிப்பார் கமல். கடந்த வாரமே சாக்ஷிக்கு குறும்படம் எதிர்பார்க்கப்பட்டது.

அலர்ட்டாகிவிடுவார்கள்
ஆனால் குறும்படம் இடம்பெறவில்லை. தொடக்கத்திலேயே குறும்படம் போட்டால் ஹவுஸ்மேட்ஸ் அலர்ட்டாகிவிடுவார்கள் என்று எண்ணினாரோ என்னவோ கடந்த வாரம் குறும்படம் போடவில்லை.

படு யூத்தாக கமல்
இந்நிலையில் இன்றைய புரமோவுக்காக காலை முதலே காத்திருந்தனர் ரசிகர்கள். பிற்பகலில் புரமோ வெளியானது. அதில் படு யூத்தாக தோன்றினார் கமல்ஹாசன்.

நினைவுப்படுத்த வேண்டிய நேரம்
புரமோவில் பேசிய அவர், தலைமை, தன்னிலை உணர வேண்டும், தன்னிச்சையாக செயல்பட வேண்டும், தைரியமாக செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை இத்தனை நாட்களாக பார்த்துவிட்டோம். இப்போ நாமும் இருக்கோம் என்பதை நினைவுப்படுத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்கிறார்.

குறும்படம் போடப்போகிறாரோ?
கமல் எங்கு என்ன பேசினாலும் அரசியல் பேசுவது போலவே உள்ளது. இந்நிலையில் கமல் இப்படி பேசியிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு வேளை குறும்படம் போட்டு காட்டப்போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இரவு தெரியும்
குறும்படம் போட்டால் மட்டுமே நாமும் பார்க்கிறோம் என்பதை போட்டியாளர்கள் உணர்வார்கள் என்பதற்காக கமல் இப்படி கூறினாரா? அல்லது வேறு ஏதாவது விஷயம் வைத்துள்ளாரா என்பது இன்று இரவு 9.30 மணிக்கு தெரியவரும்.


Click it and Unblock the Notifications











