முற்றிய பிரச்சனை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா கமல்? #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை: ஃபெப்சி யூனியனின் கோரிக்கையை ஏற்று கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பிரமாண்ட செட் போட்டு நடத்தப்பட்டு வருகிறது. செட் உள்ளிட்ட பணிகளில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் தமிழகத்தை சேர்ந்த 41 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த 41 பேரில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனும் அடக்கம்.

தொழிலாளர்
தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மிக மிக குறைந்த அளவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து அந்த 41 பேரும் இனி பணிபுரிய மாட்டார்கள் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்
41 பேரில் கமலும் அடக்கம் என்பதால் அவர் எங்கள் முடிவுக்கு மதிப்பு அளித்து நிகழ்ச்சியில் பணிபுரிய மாட்டார் என்று நம்புகிறோம் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

பிரச்சனை
முதல் சீசனிலும் வேறு மாநில தொழிலாளர்கள் தான் அதிக அளவில் வேலை செய்தனர். இது குறித்து கமலிடம் கூறியபோது அவர் நடவடிக்கை எடுத்து 50 சதவீதம் தமிழக தொழிலாளரை பணியமர்த்த செய்தார் என்கிறார் ஆர்.கே. செல்வமணி.

எதிர்பார்ப்பு
ஃபெப்சி கோரிக்கையை ஏற்று கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவாரா இல்லை கடந்த சீசனை போன்று இந்த சீசனிலும் தொழிலாளர் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி கமலுக்கு அரசியல் பேச தகுந்த இடம். இந்த நிகழ்ச்சி மூலம் அவர் சொல்ல விரும்புவதை மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும். அப்படி இருக்கும்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகுவாரா?


Click it and Unblock the Notifications











