பெண்களின் கன்னத்தை தடவ, கிள்ள, கட்டிப்பிடிக்கன்னு வாழ்றார் மகத்: கமல் கண்டிப்பாரா?
Recommended Video

சென்னை: மகத் செய்யும் சேட்டைகளை பிக் பாஸோ, கமல் ஹாஸனோ தட்டிக் கேட்கவே மாட்டார்களா?
பிக் பாஸ் வீட்டில் உள்ள ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் சேர்ந்து இந்த மகத் அடிக்கும் லூட்டி இருக்கே, ஷப்பா. அவர் இவ்வளவு சேட்டைகள் செய்தும் பிக் பாஸோ, கமல் ஹாஸனோ ஏன் கண்டிக்கவில்லை.
மகத்தை கமல் கடந்த வாரமே கண்டிப்பார் என்று எதிர்பார்த்தால் மனிதர் கண்டுகொள்ளவில்லை.

மும்தாஜ்
தன்னால் தான் மமதி வெளியேற்றப்பட்டார் என்று கூறி மும்தாஜ் அழுது கொண்டிருந்தார். அங்கு வந்த மகத் எங்களுக்கு மசாலா மும்தாஜாகத் தான் பார்த்திருக்கிறோம். அழுகிற மும்தாஜ் நல்லா இல்லை என்றார்.

டான்ஸ்
இது தான் சாக்கு என்று மும்தாஜின் கன்னத்தை பிடித்து இழுத்துவிட்டு கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலை உணர்ச்சிகரமாக பாடினார் மகத். மும்தாஜை சிரிக்க வைக்கப் பாடினாராம், நம்பிட்டோம் மகத்.

மகத்
நாட்டி நாட்டி என்று சொல்லி மகத்தும், யாஷிகாவும் ஒருவரையொருவர் கன்னத்தில் தட்டியது முடியல. யாஷிகா மகத்தின் கன்னத்தை தடவ மகத்தோ டேனி உதவி செய்டா என்று அழைத்தார். அதற்கு டேனியோ நீ செய்ற வேலையை தனியாக தான் செய்யணும், ஹெல்ப் எல்லாம் செய்ய முடியாது என்று சூப்பராக சொன்னார்.

அசிங்கம்
மகத்துக்கு தான் செய்வது அசிங்கமாக தெரியவில்லையாம், டேனி சொன்னது அசிங்கமாக இருந்ததாம். எனக்கு ரைஸ், ரசம் வேண்டும் என்று யாஷிகா கூற மகத்தும் அதுவே வேண்டும் என்றார். உடனே பாலாஜியோ ரைஸ், ரசம் ரெடி ஊறுகாய் அங்கே இருக்கிறது என்று யாஷிகாவை கை காட்டிவிட்டு சமாளித்தார்.

சமாதானம்
வெளியே காதலி இருக்க நீ ஏன் என் பின்னால் வந்த என்று ஐஸ்வர்யா ஷாரிக்கிடம் கேட்டார். யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் சண்டை போட்டார்கள். அந்த புள்ளைங்க சண்டை போட்டு சமாதானம் ஆகி கட்டிப்பிடித்தால் என்ன சுகமடா என்று கூறி அவர்களை கட்டிப்படிக்கிறார் மகத். எனக்கு ஆள் இருக்கு ஆள் இருக்கு என்று சொல்லிக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் வாழ்றார் மகத்.


Click it and Unblock the Notifications











