மகா– பிரசாத் திருமணம் நடக்குமா?... பரபரப்புடன் நாதஸ்வரம்
சன் டிவியில் நாதஸ்வரம் தொடர் 900 மாவது எபிசோடுகளைக் நோக்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நாதஸ்வரம் தொடரில் ஆரம்பம் முதலே பெண் மறுமணத்திற்கு ஆதரவான காட்சிகளே அமைக்கப்பட்டு வருகிறது.
மலர் வாழ்க்கை சரியில்லாமல் போகவே கணவனை விட்டு பிரிகிறாள். காதலித்த பெண்ணிற்கு வாழ்க்கைத் தருகிறான் கோபி. மலரின் தங்கை ரோகிணியை அவளது தாய்மாமன் மகனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து தர உள்ளனர். அதேபோல் அத்தை மகள் மகாவை திருமணம் செய்த பாண்டி கொலை செய்யப்படவே மகாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

ஒரே நாளில் திருமணம்
இப்போது பிரசாத்துடன் மகாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ரோகிணிக்கும், மகாவிற்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற நாள் குறிக்கப்பட்டுள்ளதால் என்பதால் இருவர் வீட்டிலும் குழப்பம் நீடிக்கிறது.

மீனாட்சியின் கோபம்
மருமகள் மலரின் மீதும், அவர்களின் பெற்றோர்கள் மீதும் கோபத்தில் இருக்கும் மீனாட்சி, ரோகிணியின் திருமணத்திற்கு மலர் போக தடை விதிக்கிறாள். இதனால் கோபத்தோடு இருக்கிறாள் மலர்.

மலர் – கோபி
தங்கை ரோகினியின் திருமணத்திற்குப் போவதா? அல்லது மகா-பிரசாத் கல்யாணத்திற்கு போவதா என்று மலர் - கோபி இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் மகாவின் திருமணத்திற்குத்தான் முதலில் போகவேண்டும் என்று கோபி கூறவே அவர்களிடையே பிரச்சினை உருவாகிறது.

திருமணத்தில் குழப்பம்
பிரசாத் - மகாவின் திருமணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்று திட்டமிடுகிறான் தங்கையின் கணவன் சுப்ரமணியன். மகா கழுத்தில் தாலி கட்டினால் உன் தங்கையின் கழுத்தில் தாலி இறங்கும் என்று மிரட்டுகிறான்.

பரமுவின் கணவன்
பணத்தை திருடிக்கொண்டு போன பரமுவின் கணவன் மருத்துவமனையில் இருக்கிறான். அவனால் பேச முடியவில்லை. மறுபடியும் வீட்டிற்கு திரும்புவானா?

900மாவது எபிசோட்
நாதஸ்வரம் தொடரில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது. 900 எபிசோடுகளை நோக்கி நகர்கிறது. மாமியார் மீனாட்சி மருமகள் மலரை புரிந்து கொள்வாளா? பரமுவின் கணவன் வீட்டிற்கு திரும்புவனா? கோபியின் இரண்டாவது தங்கையின் திருமணம் நடைபெறுமா? மகா - பிரசாத் திருமணம் சிக்கலின்றி நடக்குமா? என பல பரபரப்பான திருப்பங்களை நோக்கி நகர்கிறது நாதஸ்வரம்.


Click it and Unblock the Notifications











