ராஜிக்கு வேலை போயிருமா? ‘ஆபிஸ்’ பரபரப்பு
விஜய் டிவியின் 'ஆபிஸ்' தொடர் இந்த வாரம் பரபரப்பாக கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதம் கஷ்டப்பட்டு முடித்த வேலை ராஜியின் தவறால் கம்ப்யூட்டரிலிருந்து அழிந்து போகிறது.
இது சதியா, அல்லது வைரஸ் வேலையா என்று தெரியவில்லை. இதில் டீம் ஹெட் கவுசிக், ஐ.டி டீம் சேகருக்கும் இடையே பிரச்சினையாக இருக்கிறது.
கார்த்திக்கை பிடிக்காக கவுசிக் எப்படி போட்டு தாக்குவது என்று காத்திருந்தான். இப்போது சரியான நேரம் கிடைக்கவே வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறான்.
இதனால் ராஜிக்கு வேலை போகும் சூழல் ஏற்படுகிறது. சூசனிடம் கார்த்திக் பேசி மூன்று நாட்கள் டைம் கொடுங்கள் நாங்கள் மீண்டும் முயற்சிக்கிறோம் என்று போராடுகிறான். அனுமதியும் கிடைத்து விட்டது...

நான் வேலையை விடுறேன்
இது முடியாது என்று கவுசிக் சொல்கிறான். ராஜி என்பதால்தானே என்று கவுசிக் கேட்க, கோபப்படுகிறான் கார்த்திக். நான் வேலையை விட்டுப் போகிறேன் என்று ராஜி அழவே, கஷ்டத்தில் கை கொடுக்க முன் வருகிறான் கார்த்திக். நம்பிக்கையின்றி சம்மதிக்கிறான் கவுசிக்.

3 நாள் வேலை
30 நாள் செய்த வேலையை 3 நாளில் முடிக்கவேண்டும் என்று கார்த்திக், ராஜி, விஷ்ணு, லஷ்மி ஆகிய நால்வரும் இணைந்து போராடுகின்றனர்.

உன்னை எனக்கு பிடிக்குதே
ஆபிசில் விடிய விடிய வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நமக்காக எல்லோரும் சிரமப்படுகின்றனரே என்று ராஜி சந்தோசப்படுகிறாள்.
கார்த்திக்கை பார்க்கும் ராஜிக்கு, ‘ஐயோ இவனை எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிக்கிதே' என்று மனசுக்குள் யோசிக்க ஆரம்பிக்கிறாள்.

கலகலப்பான விஷ்ணு
சிரமமான சூழ்நிலையிலும் காமெடி செய்து கொண்டு ஆபிஸ் இருக்கத்தை கொஞ்சம் தளர்த்துகிறான் விஷ்ணு. ரிசப்சனிஸ்டிடம் வழிந்த காரணத்தால் தன் மீது கோபத்தில் இருக்கும் லஷ்மியைப் பார்த்து ‘ஐ லவ் யூ' என்கிறான்.

சொதப்பும் சேகர்
ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் பைல்களை சரியாக எடுத்து தராமல் சொதப்புகின்றனர். இது கவுசிக்கும், சேகரும் இணைந்து செய்யும் சதியோ என்று விஷ்ணுவிற்கு சந்தேகம் வருகிறது. என்ன செய்யலாம் யோசிக்கின்றனர்.

ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்
கார்த்திக், ராஜி டீம் ஒருவழியாக வேலை செய்து கொண்டிருக்கையில் ஆபிசின் ஹெச் ஆர், சேல்ஸ் டிபார்மென்ட் உடன் அடிக்கும் கமென்ட் ஒரு டிராக் போகிறது. கொஞ்சம் போரடிக்கும் நேரத்தில் ஹெச் ஆர் உடன் மாமா, சேல்ஸ் டிபார்ட்மென்ட் டீம் செய்யும் கலாட்டாக்கள் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது.

காதல் வந்திருச்சோ?
விஷ்ணுவுக்கும், லஷ்மிக்கும் இடையேயான புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி வருகிறது. ஆபிசில் இந்த வார எபிசோடுகளில் அவர்களின் ரொமான்ஸ்தான். இருவரும் சந்தித்தாலே ‘அவத்த பையா, செவத்த பையா'.... என பரதேசி படப்பாடலை போட்டுவிடுகின்றனர். ஆனால் எந்த ஆபிசில் இப்படி ரிசப்சனிலேயே ரொமான்ஸ் செய்கின்றனர் என்று தெரியவில்லை.

ராஜியின் வேலை தப்புமா?
ஒரு முழுநாள் முடிந்து விட்டது. இனி இருக்கும் நாளில் வேலையை முடிக்க முடியுமா? சரியாக செய்ய முடியுமா என்று கேண்டீனில் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஹார்டுவேர் டிவிசன் மாமா மூலம் உதவி வருகிறது. இனி வரும் எபிசோடுகளில்தான் தெரியும் கார்த்திக் டீம் ஜெயிக்கிறதா? ராஜியின் வேலை தப்புமா என்று.


Click it and Unblock the Notifications











