Lakshmi stores serial: ரவி பாக்கிய லட்சுமிக்கு கிடைப்பானா இல்லை தேஜாவுக்கா?

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி கழுத்தில் ரவி தாலி கட்டிடறான்.

ரெண்டு பேரும் காதலிச்சுட்டு இருந்தாலும் தாலி கட்டியது என்னவோ,ஒரு விபத்து மாதிரிதான் நடந்து போச்சு.

மினிஸ்டர் சகுந்தலா தேவியின் மகள் தேஜாவோ, திடீர்னு விஷம் குடிச்சு ரவிதான் தனக்கு வேணும்னு நாடகம் ஆடறா.

தாத்தாவுக்கு தெரியும்

தாத்தாவுக்கு தெரியும்

ரவி தன் காதலை சொல்ல பீச்சுக்கு போயிருந்த பாக்கியலட்சுமியை சந்திக்கறான்.ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்த போது ,ரவுடிகள் சுற்றி நின்று கலாட்டா செய்யறாங்க. காதலின்னா எங்க கண்ணு முன்னால தாலிக்கட்டுன்னு மஞ்சள் கயிறு குடுத்து மிரட்டறாங்க. அதனால ரவி பாக்கியலட்சுமி கழுத்தில தாலி கட்டிடறான். பாக்கிய லட்சுமி வீட்டுக்கு வந்து தாத்தாகிட்ட சொல்லிடறா. தாத்தா முதலில் கோச்சுக்கிட்டவர்,ம றுபடி ஓகே சொல்றார்.

அண்ணிகிட்ட ரவியை

அண்ணிகிட்ட ரவியை

உங்க அண்ணி மகாலட்சுமிஅம்மாகிட்ட சொல்லிடுங்க ரவி.இது என் பேத்தியோட வாழ்க்கைப் பிரச்சனை.. அவங்க ஒத்துக்கிட்டாத்தான் பாக்கியலட்சுமியை உங்க குடும்பமும் ஏத்துக்கும்னு சொல்றார். இன்னிக்கே சொல்லிடறேன் தாத்தான்னு வீட்டுக்கு வந்தவன், தங்கச்சி கமலா கல்யாணம் நடக்க இருக்கறப்போ நாம் சொல்லி, அண்ணிக்கு ஏதாவது உடம்பு சரியில்லாமப் போச்சுன்னா என்ன பண்றதுன்னு சொல்லாமல் இருந்துடறான்.

மகள் தேஜா

மகள் தேஜா

மத்திய மினிஸ்டர் சகுந்தலா தேவியின் மகள் தேஜஸ்ரீ திடீர்னு விஷத்தை குடிச்சுட்டதா வேலைக்காரி வந்து சொல்றா. அங்கு இருந்த லாயர் தேவராஜ், இருங்க மேடம், என் தம்பி பொண்டாட்டி டாக்டர்தான் அவளை வர சொல்றேன்னு சொல்லி, உமாவை வர சொல்றார் குஷ்பூவின் கணவர் தேவராஜ் அவளும் வந்து பார்த்துட்டு கடுமையான விஷம் குடிச்சு இருக்காங்கன்னு சொல்லி,சரி செய்தும் விடறா.

நாடகமா உண்மையா

நாடகமா உண்மையா


தேஜா விஷம் சாப்பிட்டது உண்மையா பொய்யான்னு இன்னும் நமக்கே சொல்லலை. இந்த சமயத்தில்தான் உனக்கு என்ன குறை வச்சேன்.. எதுக்கு விஷம் குடிச்சே தேஜான்னு மினிஸ்டர் கொஞ்சம் ஓவராவே அழறாங்க. அதை உன்னால எனக்கு செய்து தர முடியாதுன்னு சொல்றா தேஜா.. என்ன சொல்றே தேஜா, உன் அம்மா மினிஸ்டர் உனக்காக எதை வேணா செய்வாங்கன்னு தேவராஜ் சொல்ல, எனக்கு ரவி வேணும்.. .கல்யாணம் செய்து வைக்க முடியுமான்னு கேட்கறா. ரவியா எந்த ரவின்னு தெரியாத மாதிரி மினிஸ்டர் கேட்க ,லட்சுமி ஸ்டோர்ஸ் ரவின்னு சொல்றா தேஜா.

ரவி என் தம்பிதான்ம்மா...என் சொல்லை மீற மாட்டான்.இந்த ஜென்மத்துல் நீதான் ரவிக்கு பொண்டாட்டின்னு சத்தியம் செய்து தர்றார் தேவராஜ். பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்டிட்டு, தேஜா கூட ரவி வாழ்வானா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X