சரவணன் - மீனாட்சி பிரிவு நிரந்தரமாகிவிடுமா?

By Mayura Akilan

சரவணன் - மீனாட்சி இடையே ஏற்பட்ட மோதல் அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்திவிட்டது.

இதனால் மீனாட்சி மீது கோபத்தின் உச்சியில் இருக்கிறான். அவனை சமாதானப்படுத்த மீனாட்சி எத்தனையோ முறை முயற்சி செய்தும் சரவணன் சமாதானமடையவில்லை.

ஈகோ பிரச்சினைதான் சரவணனை பேச விடாமல் தடுக்கிறது. மன்னித்து பேசலாம் என்று நினைத்த நேரத்தில் அதை ஒத்திப் போடுகிறான். அதுவே சிக்கலில் கொண்டு போய் விடுகிறது.

500 எபிசோடுகளை நோக்கி

500 எபிசோடுகளை நோக்கி

சரவணன் மீனாட்சி இடையேயான காதலும், மோதலும் சகஜமான ஒன்றுதான். திடீர் முட்டல், மோதல் என முதல் எபிசோடு தொடங்கி 493 எபிசோடுகளாகவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நிச்சயமும், திருமணமும்

நிச்சயமும், திருமணமும்

சரவணன் - மீனாட்சியின் நிச்சயதார்த்தமும், திருமணமும் திருவிழா போல ரசிகர்கள் முன்னிலையில் நடத்தினார்கள்.

ஊடலும்… கூடலும்

ஊடலும்… கூடலும்

சரவணன் மீனாட்சி தம்பதியரிடையே ஊடல் எந்த அளவிற்கு சகஜமோ, அதே அளவிற்கு கூடலும் சகஜம். ஆனால் சமீபத்திய பிரிவு இருவரிடையே பிளவை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது.

அப்பாவிற்கு விபத்து

அப்பாவிற்கு விபத்து

சரவணன் மீனாட்சி இடையேயான பிரிவு இருவரின் பெற்றோரிடையேயும் மனவருத்தத்தை தருகிறது. உன்கூட மாப்பிள்ளை இன்னும் பேசலையா? என்று கேட்டு விட்டு மன உளைச்சலுடன் சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கிவிடுகிறார்.

ஆபத்தான நிலையில்

ஆபத்தான நிலையில்

உயிருக்கு ஆபத்து... மூளை ஆபரேசன் என போனில் தகவல் வருகிறது. இருவரும் கிளம்பி வரவேண்டும் என்று சவுந்தர்யா போன் செய்ய அதை நம்ப மறுக்கிறான் சரவணன். அது எவ்வளவு பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விடப்போகிறது என்பதை அப்போது அவன் உணரவில்லை.

முகத்துல முழிக்காதீங்க!

முகத்துல முழிக்காதீங்க!

மீனாட்சியின் அப்பாவிற்கு விபத்து என்ற உடன் அவரை பார்க்க கிளம்பும் ராஜசேகரை அவரது மனைவி தடுக்கிறாள். பேச்சை மீறிப் போனால் முகத்தில் முழிக்கக் கூடாது என்கிறாள். அதையும் மீறி திருநெல்வேலி செல்கிறார் ராஜசேகர்.

நிரந்தரமாகிவிடுமா?

நிரந்தரமாகிவிடுமா?

அப்பாவிற்கு நேர்ந்த விபத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மீனாட்சிக்கு சரவணன் மீதான கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. அப்பாவிற்கு சரியாகிவிடுமா? இல்லை அது மறக்க முடியாத இழப்பாகிவிடுமா? இதனால் சோகத்தில் மூழ்கிய மீனாட்சி எடுக்கும் முடிவு என்ன?

நெருங்கும் கிளைமாக்ஸ்

நெருங்கும் கிளைமாக்ஸ்

சரவணன் மீனாட்சி தொடர் 500 வது எபிசோடுடன் முடிவடையப் போகிறது. முடிவு என்ன என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. சரவணன் மீனாட்சி மீண்டும் இணைவார்களா? அல்லது அவர்களுக்கு இடையேயான பிரிவு நிரந்தரமாகிவிடுமா? முடிவு மகிழ்ச்சியைத் தருமா? சோகத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் சில எபிசோடுகள் காத்திருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X