கோமாளியா இருந்தாலும்.. கொரலு நல்லாருக்குத்தா.. கோவை சரளா ஆவாரா ஷிவாங்கி!

சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் உண்மையாகவே கோமாளியாக மாறிப்போன ஷிவாங்கிக்கு அழவும் தெரியுமான்னு கேட்கற மாதிரி ஷோவின் ஃ பினாலேயில் அழுதுவிட்டார் ஷிவாங்கி.

விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆன ஷிவாங்கியை அத்தோடு விட்டு விடாமல், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கொண்டு வந்து உலகப் புகழ் அடைய வைத்துள்ளது விஜய் டிவி.

சுத்தமாக சமையல் வாசனையே இல்லாத ஷிவாங்கியை இப்படி ஒரு குக்கரி ஷோ நடத்த போறோம். அதில் குக்குங்களை நீங்கள் டிஸ்டர்ப் செய்தா போதும்னு சொல்லித்தான் அழைத்தார்களாம். ஆனால், நிகழ்ச்சி அப்படியே தலைகீழாக இருந்தது.

சமைக்க வச்சுட்டாங்க

சமைக்க வச்சுட்டாங்க

சமையலை டிஸ்டர்ப் பண்ண வாங்கன்னு கூப்பிட்டு, முழுக்க முழுக்க சமைக்க வச்சுட்டாங்க என்று காமெடியாகப் பேசும் ஷிவாங்கி, வெகுளித் தனமான ஒரு பெண். எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிற 19 வயதான ஷிவாங்கி, வெள்ளந்தியாக பேசி அனைவர் மனதிலும் இடம் பிடித்து உள்ளார். காமெடிஇவருக்கு இயல்பாகவே வந்து.. ரசிக்க வைக்கும் கை வந்த கலையா இருக்கு.

ஷிவாங்கி சிம்ம குரல்

ஷிவாங்கி சிம்ம குரல்

ஷிவாங்கி பேசும்போது ஒரு குரல் பாடும்போது ஒரு குரல் என்று கலக்கி வந்தாலும், இவர் திட்டம் போட்டு எந்த குரலும் இவருக்கு வெளி வரவில்லை. இயற்கையாகவே பேசும்போது காமெடிக்கு ஆப்டான குரலும், பாடும்போது ரெக்கார்டிங்குக்கு ஆப்டான குரலும் என்று சரஸ்வதியிடம் வரம் வாங்கி வந்தவர் போல இவர் குரல் அமைந்துள்ளது. குக்கு வித் கோமாளியில் ஆளாளுக்கு ஒரு பட்டம் வைத்து ஜட்ஜஸ் கேடயம் வழங்கினார்கள். அதில் சிம்ம குரலோள் பட்டத்தை ஷிவாங்கிக்கு வழங்கினார்கள்.

குரல் தந்த பட்டம்

குரல் தந்த பட்டம்

ஷிவாங்கி இந்த கேடயத்தை வாங்கும்போது பேச வந்து பேச முடியாமல் அழுதே விட்டார். அனைவரையும் கலங்க வைத்தும் விட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான் குரல் மாற்றி பேசி நடிக்கிறேன்னு சொன்னாங்க. ஆனால், அதே குரலுக்கு இன்றைக்கு பட்டம் வாங்கி இருக்கேன்னு கலங்கினார். அசால்டா காமெடி செய்யும் ஷிவாங்கிக்கு அழவும் தெரியுமா என்றாகி விட்டது இந்த நிகழ்வு.

மணிமேகலை சூனியக்காரி

மணிமேகலை சூனியக்காரி

நிகழ்ச்சியின் இன்னொரு பெண் கோமாளியான மணிமேகலைக்கு சூனியக்காரி என்று பட்டத்தை வழங்கினார்கள். கோமாளியாக போகும் குக்குகளை எப்படியும் தரை மட்டத்துக்கு கொண்டு வருவதில் மணிமேகலை கில்லாடியாம். நடிகை ரேகா என்று ஆரம்பித்து இவர் வீட்டுக்கு அனுப்பிய குக்குகள் இதை ஆமோத்தித்தனர். என்றாலும் இதெல்லாம் மணிமேகலைக்கு தேவையா என்று பலரும் பேசி வருகிறார்கள்.

திரையில் வாய்ப்பு

திரையில் வாய்ப்பு

திரையில் வாய்ப்பு கிடைத்தால் நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கு... கோவை சரளா வாய்ஸ் போல் வித்தியாசமான வாய்ஸ் ஷிவாங்கிக்கு. காமெடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் ஷிவாங்கி நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. ஆனால், ஷிவாங்கி பாடுவதைக் கேட்டால்.. இவர் சினிமாவில் பாடி ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணமும் வருகிறது. ஷிவாங்கி பல துறையிலும் ஜெயிக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X