twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Actor Sivakarthikeyan: சிவ கார்த்திகேயன் பிடிவாதம் சரிதானா? எதுக்கு வீணாக?

    |

    சென்னை: நடிகர் சிவ கார்த்திகேயன் பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும் என்று இன்டஸ்ட்ரியில் பேச்சு அடிபட்டு கொண்டு இருக்கிறது. ஏன் இப்படி வீண் பிடிவாதம் பிடிக்கறார் என்று கூட எரிச்சலாக பேசிக்கறாங்களாம்.

    ஏற்கனவே ஹிட்டான பெரும் தலைகளின் படத்தின் டைட்டிலை எடுத்து வச்சுக்கிட்டு நடிக்கறது எப்போதோ ட்ரண்டில் வந்ததுதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மதமில்லை எனும்போது, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு தரணும்னு இன்னுமா சிவ கார்த்திகேயனுக்கு புரியலைன்னு அலுத்துக்கறாங்க.

    தன்னைப் பத்தி சிவ கார்த்திகேயனுக்கு அதீத தன்னம்பிக்கை வந்திருச்சு..ஓவர் தன்னம்பிக்கை சில சமயம்களில் காலை வாரி விட்டுரும்னும் பலபேர் முணுமுணுக்கறாங்க.

    சிவாவின் வேலைக்காரன்

    சிவாவின் வேலைக்காரன்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் வேலைக்காரன்.இந்த படத்தின் பெயர் கொண்ட ஒரு படத்தில் நடித்தால்தான் சூப்பர் ஸ்டார் மாதிரி உச்சத்துக்கு போகலாம்னு கனவு கண்டாரோ என்னவோ, அந்த டைட்டில் வச்சு படம் நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டு, நடிச்சார், ஆனால், அந்த படத்தின் கதி என்னாச்சு என்று எல்லாருக்கும் தெரியும்.குறிப்பா சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரொம்ப கொந்தளிச்சு கூடப் போயிட்டாங்க. தலைவர் படத்தோட பேரை சிவா கெடுத்துட்டதா.

    எம்ஜிஆர் படம் டைட்டில்

    எம்ஜிஆர் படம் டைட்டில்


    இயக்குநர் பாண்டிராஜன் இயக்கப்போகும் ஒரு படத்தில் நடிக்கர் சிவ கார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்துக்கு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை படத்தின் டைட்டிலை வைக்க வேண்டும் என்று கறாரா இயக்குநர் கிட்ட சொல்லிட்டாராம். அறிவிப்பும் வெளிவந்துட்ட இந்த நேரத்தில், விஜயா புரடக்ஷன்ஸ் யாருக்கும் எங்கள் படத்தின் டைட்டில் உரிமையை தரவில்லை என்று அறிக்கையே விட்டு இருக்காம். இருந்தாலும், அதே டைட்டில் வச்சு படம் எடுப்போம். நீதி மன்றத்தில் பார்த்துக்குவோம்னு சிவா சொல்றாராம்.

    கொஞ்சம் வளர்ந்துட்டாலும் இல்லாத கொம்பை சீவி விட்டுக்குவாங்க போல...

    சிவா அதே வழி

    சிவா அதே வழி

    நடிகர் தனுஷ் தன் மாமனாரின் படத்தின் பெயர் வச்ச படிக்காதவன், மாப்பிள்ளை, தங்கமகன் என்று படங்களில் நடித்து எதுவும ஹிட் கொடுக்கவில்லை. ஆனால்,தனுஷ் எனக்கு இப்படி டைட்டில் வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. இயக்குநர்கள்தான் என்னவோ மாமனார் சொத்து மருமகனுக்கு உரிமை என்பது போல டைட்டிலை கேட்டு வாங்கி தனுஷை நடிக்க வைத்தார்கள். இதில் தனுஷ் பங்கு என்று எதுவும் இல்லை.சொல்லப் போனால் இது போல விஷயங்களுக்கு தனுஷ் ஆசைப்படுபவரும் இல்லை.

    இருக்காங்க தயாரிப்பாளர்கள்

    இருக்காங்க தயாரிப்பாளர்கள்

    இப்போது சின்னத் திரை சீரியல்களுக்கு புகழ் பெற்ற படங்களின் பெயரை வைப்பதும் டிரெண்டாகி உள்ளது. இப்போது வந்த கடைக்குட்டி சிங்கம் வரைக்கும் படத்தின் பேரை சீரியலுக்கு வச்சுக்கிட்டு இருக்காங்களே..இதை ஏன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கண்டுகொள்ளாமல் இருக்காங்க .நல்லபடங்களை இனிமையா அசை போட முடியாதபடி படத்தின் பெயரை கேட்டாலே பழசா புதுசான்னு கேட்க வேண்டிய அவல நிலை பழைய நல்ல படங்களுக்கு ஏற்பட்டு வருகிறது என்பதுதான் வருத்தம்.

    English summary
    Actor Siva Karthikeyan's stubbornness is to ease some talk in the industry. Why not make such a vile stubbornness, even annoyed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X