இந்தியை காப்பியடித்து முதலில் எஸ்கேப், இப்போ சிறை, அடுத்தது கசமுசாவா?
Recommended Video

சென்னை: இந்தியை காப்பியடித்து தமிழ் பிக் பாஸ் வீட்டில் சிறையை அமைத்துள்ளனர்.
இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கில் அறிமுகம் செய்து வைத்தனர். தமிழில் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் டிஆர்பிக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.

சிறை
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் சிறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறை ஐடியா இந்தியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது. இந்தி பிக் பாஸ் வீட்டு சிறையில் உள்ள வசதிகள் கூட இந்த சிறையில் இல்லை.

எஸ்கேப்
கடந்த சீசனில் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றதும் இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது தான். இந்தியில் இருந்து ஒவ்வொரு விஷயமாக காப்பியடிக்கிறார்கள்.

கசமுசா
இந்தி பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடி உருவாகும். அதில் ஏதாவது ஒரு ஜோடி இரவில் கசமுசா செய்யும். சிசிடிவி கேமரா இருக்கிறது என்று தெரிந்தும் தைரியமாக இப்படி செய்யும்.

தமிழ்?
சிறையை அடுத்து கசமுசா காட்சிகளையும் இந்தியில் இருந்து காப்பியடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆரவ் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மருத்துவ முத்தம் என்று சமாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி
யார் எல்லாம் வந்தால் சர்ச்சையை ஏற்படுத்தி டிஆர்பியை ஏற்றுவார்கள் என்று பார்த்து பார்த்து தான் இந்தியில் போட்டியாளர்களை தேர்வு செய்கிறார்கள். தமிழிலும் அதே பாணியை பின்பற்றுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











