செய்வீங்களா மக்களே, செய்வீங்களா?: ஐஸ்வர்யா கேட்பதை செய்வீங்களா?
சென்னை: உங்களின் ஆசையை நிச்சயம் பிக் பாஸ் நிறைவேற்றி வைப்பார் ஐஸ்வர்யா.
பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பவர்களில் பார்வையாளர்களை அதிக அளவில் கடுப்பேற்றிய பெருமையை பெற்றவர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக் பாஸ் படாதபாடு படுகிறார்.
அவரே வீட்டை விட்டு செல்கிறேன் என்று பல முறை கூறியும் அதை பிக் பாஸ் கண்டுகொள்ளவே இல்லை.

2 வாரங்கள்
நான் இந்த வீட்டிற்கு வந்தபோது யார் பற்றியும் எனக்கு தெரியாது. நான் 2 வாரங்கள் தான் இருப்பேன் என்று நினைத்து வந்தேன். ஆனால் 14 வாரங்களாக இருந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் ஆசியுடன் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்(பிக் பாஸ் ஆசியுடன்) என்று கமல் ஹாஸனிடம் தெரிவித்தார் ஐஸ்வர்யா. அவர் பேசிய போது பார்வையாளர்கள் முகத்தில் அதிருப்தி இருந்ததை காண முடிந்தது.

மக்கள் அல்ல
நீங்கள் 14 வாரங்கள் வரை இந்த நிகழ்ச்சியில் தாக்குப்பிடிக்க தமிழக மக்கள் காரணம் இல்லை ஐஸ்வர்யா. மக்களின் அமோக ஆதரவை பெற்றதாக தவறாக நினைத்துள்ளீர்கள். பார்வையாளர்களை பகைத்துக் கொண்டு அவர்களின் ஓட்டுகளை எல்லாம் செல்லா ஓட்டுகளாக்கி உங்களை இத்தனை வாரங்களாக காப்பாற்றி வருபவர் பிக் பாஸ் மட்டுமே.

நல்லது
இந்த வீட்டில் தப்பு செஞ்சிருக்கலாம், நல்லது செஞ்சிருக்கலாம். என் மனதில் பட்டதை அப்படியே செய்தேன். எனக்கு ஒரு ஆசை உள்ளது. 6 வருஷமாக தமிழ்நாட்டில் இருக்கிறேன். எனக்கு கிரீன் கார்டு கொடுத்து தமிழர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அது என் அம்மாவின் ஆசையும் கூட என்றார் ஐஸ்வர்யா.

வெற்றி
எனக்கு ஜெயிக்கணும் என்று ஆசையில்லை. அந்த ரூ. 50 லட்சத்தை ஜெயிக்கணும் என்று ஆசை இல்லை. ஆனால் ஃபைனல் ஸ்டேஜ் வரைக்கும் செல்ல வேண்டும் என்று ரொம்ப ஆசையாக உள்ளது. அதற்காக நீங்க தயவு செய்து எனக்கு ஓட்டு போடுங்க என்று பார்வையாளர்களிடம் கேட்டுக் கொண்டார் ஐஸ்வர்யா.

டைட்டில்
பிக் பாஸுக்கு ரொம்ப பெரிய மனசும்மா. அதனால் மக்களை ஏமாற்றி உங்களை காப்பாற்றி வருகிறார். டைட்டிலை உங்களுக்கே கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் உங்களின் இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றி வைக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. தமிழ் மக்கள் ஓட்டு போடாவிட்டாலும் அவர்கள் போட்டதாகக் கூறி உங்களின் ஆசையை பிக் பாஸ் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.


Click it and Unblock the Notifications











