நிலாவுக்கு மறு தாலி கட்டணுமா... குருஜி சொல்றாரே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்.. நீலாம்பரியின் தம்பி அசோக்கை திடீர்னு கல்யாணம் செய்துகிட்டேன்னு சொல்றா நிலா.
நீலாம்பரியும் இவங்க கல்யாணத்தை சந்தோஷமா ஏத்துக்கறாங்க. காரணம் அவங்க ஆசையும் அதுதான்.
தன் அப்பாவின் சொத்தை அடையத்தான் நீலாம்பரி இப்படி டிராமா போடறாங்கன்னு தெரிஞ்சுதான் நிலா அசோக்கை கல்யாணம் செய்துக்கிட்டதா நடிக்கறா.

நிலா அசோக்
நிலாவின் காதலன் கார்த்திக்குடன் சேர்ந்துதான் மூணு பேரும் இந்த டிராமாவைப் போடறாங்க. கல்யாணம்தான் செய்துகிட்டு வந்துட்டாங்க... இவங்க ரிஷப்ஷனை நடத்தி ஊரறிய கல்யாணத்தை அறிவிக்கலாம்னு நீலாம்பரி நினைக்கறாங்க.

ரிஷப்ஷன் நடக்கிறது
நிலா அசோக் இருவருக்கு ரிஷப்ஷன் நடக்குது. அப்போ கார்த்திக்கும் நிலாவும் சந்திச்சுக்கறாங்க. இருவரும் கட்டிகிட்டு நிற்பதை நீலாம்பரியின் மகன் சஞ்சய் வீடியோ எடுத்து, அதை காமிச்சு நிலாவை அடையலாம்னு கனவுல இருக்கான்.

ஷாக் நீலாம்பரிக்கு
சுவாமிஜி வந்து இருக்கும்போது நீலாம்பரிக்கு கரண்ட் ஷாக் அடிச்சுருது. சுவாமிஜி நிலாவுக்கு, அசோக்குக்கும் கல்யாணம் நடந்த நேரம் சரியில்லை. உடனடியா மறு தாலி கட்ட சொல்லுங்கன்னு சொல்ல, இருவரும் ஆடிப்போகிறார்கள்.

தாலியை கட்டு அசோக்
அசோக் என்ன தயங்கறே... இதுல தப்பு என்ன இருக்கு... அதான் குருஜி சொல்லிட்டாருல்ல... தாலியை கட்டுன்னு நீலாம்பரி சொல்ல, நிலா தவிக்க...ரேவதிகிட்டே இருந்து போன். இந்த நேரத்துல யாரு போன்லேன்னு நீலாம்பரி கேட்க ரேவதி கூப்பிடறாக்கான்னு சொல்றான். வேலைக்காரிதானே...அப்புறம் பேசிக்கலாம்..நீ கட்டுன்னு சொல்ல...
அவசரம் இல்லேன்னா ரேவதி பேச மாட்டாங்கன்னு போனை எடுக்க, அசோக்கின் மனைவி அஞ்சலியை காணோம்னு ரேவதி அழுதுகிட்டே சொல்றாங்க. ஆனா, குருஜி வரும் பவுர்ணமிக்குள்ள ரெண்டாவது தாலி கட்டிடணும்னு குருஜி சொல்லிட்டு போறார்.


Click it and Unblock the Notifications











