பிக் பாஸ் வீட்டில் கபாலியாக மாறிய பொன்னம்பலம்: கொந்தளிக்கும் பெண் போட்டியாளர்கள்
Recommended Video

சென்னை: சைடு கேரக்டராக அமைதியாக இருந்து வந்த பொன்னம்பலத்தை வில்லனாக்கியுள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வில்லன் பொன்னம்பலம் சைடு கேரக்டர் போன்று எதிலும் தலையிடாமல் இருந்து வந்தார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் நடிப்பதை கமல் ஹாஸனிடம் பளிச்சென்று தெரிவித்தார்.
உண்மையை போட்டுடைத்த பொன்னம்பலத்தை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது ஆனால் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை.
பொன்னம்பலம்
பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பொன்னம்பலம் தங்களிடம் அசிங்கமாக பேசுவதாக குறை கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்தாஜ்
பிக் பாஸ் வீட்டின் நாட்டாமையாக இருக்கும் மும்தாஜ் பொன்னம்பலத்திடம் மல்லுக்கட்ட கிளம்புகிறார். அது என்ன பெண்களிடம் அசிங்கமாக பேசுவது என்று நியாயம் கேட்கப் போகிறாராம்.

ரம்யா
எப்பொழுதும் கூலாக இருக்கம் ரம்யா கூட அடுத்த முறை என் முன்பு அப்படி பேசட்டும் உங்களின் மகளை பார்த்து அப்படி தான் பேசுவீர்களா என்று கேட்பேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.

கோபம்
அடுத்த முறை அவர் அசிங்கமாக பேசட்டும் கிழிஞ்சிடும் என்று ஆர்.ஜே. வைஷ்ணவி கூறுகிறார். இப்படி மொத்த பெண்களும் கொந்தளிக்கும்படி பொன்னம்பலம் அப்படி என்ன தான் அசிங்கமாக பேசினாரோ?


Click it and Unblock the Notifications











