ஐஸ்வர்யாவை காப்பாற்றியது பிக் பாஸ் இல்லை, நாம் தானாம்: கமல் அடேங்கப்பா விளக்கம்

By Siva

சென்னை: பார்வையாளர்களாகிய நாம் நம் வேலையை சரியாக செய்யவில்லை என்று கடைசியில் நம் மீது பழியை தூக்கிப் போட்டுவிட்டார் பிக் பாஸ்.

நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்றால் அதற்கான வேலையை செய்ய வேண்டும் என்று தான் ப்ரொமோ வீடியோவில் கூறியதற்கான விளக்கம் அளித்துள்ளார் கமல்.

சாரி கமல் சார், உங்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

 இரண்டாவது சீசன்

இரண்டாவது சீசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை கோடிக் கணக்கில் பார்த்த மக்கள் கோடிக் கணக்கில் வாக்கு அளித்தார்களாம். ஆனால் இந்த ஆண்டு கோடிக் கணக்கில் பார்த்தாலும் ஓட்டுகள் அந்த அளவுக்கு இல்லை என்கிறார் கமல். எப்படி கமல் சார் ஓட்டு போடுவாங்க. அவர்கள் யாரை வெளியேற்ற நினைத்து ஓட்டு போட்டாலும் அது நடப்பது இல்லையே?

ஓட்டு

ஓட்டு

உங்களின் பலம் ஓட்டுரிமை தானே. அதை சும்மா ட்விட்டரிலும், டிரோலிலும் உங்களின் விமர்சனத்தையும், பாராட்டையும் காட்டினால் போதாது. நீங்கள் விரும்பும் மாற்றம் நடக்க வேண்டுமானால் ஓட்டு போட வேண்டும். களத்தில் இறங்கு களத்தில் இறங்கு ட்விட்டரில் பேசாதே என்று என்னை மட்டும் சொன்னீங்களே, அதை தான் நான் உங்களுக்கு சொல்கிறேன். ட்விட்டரில் பேசாதீங்க இங்க வாங்க. வந்தால் உங்களுக்கு வேண்டும் என்பது கிடைக்கும். இல்லை என்றால் தேவையில்லாத கோபம், சந்தேகம் ஏற்படும் என்றார் கமல்.

 நடக்காது?

நடக்காது?

கோடிக் கணக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் அந்த அளவுக்கு வாக்களிக்காததற்கு காரணமே நம்பிக்கை இல்லாததது தான் கமல் சார். பார்வையாளர்களின் ஓட்டுக்கு மதிப்பு இல்லை. பிக் பாஸ் தான் விரும்பும் நபரை பார்வையாளர்களின் ஓட்டுகளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு காப்பாற்றுகிறார். இதை பார்த்து தான் மக்கள் ஓட்டு போடுவதை குறைத்துக் கொண்டனர்.

 பிக் பாஸ்

பிக் பாஸ்

முதல் சீசனில் நிகழ்ச்சியை பார்த்த கோடிக் கணக்கானோரும் வாக்களித்தனர். இந்த சீசனை பார்க்கும் கோடிக் கணக்கானோரில் அனைவரும் வாக்களிக்கவில்லை. இது தான் இரண்டு சீனுக்கும் உள்ள வித்தியாசம் என்றீர்கள் கமல். கடந்த சீசனில் குறிப்பிட்ட போட்டியாளரை காப்பாற்ற பிக் பாஸ் பிராடுத்தனம் செய்யவில்லை. ஆனால் இந்த சீசனில் ஒரு போட்டியாளரை காப்பாற்ற பல வேலைகள் செய்கிறார். இது தான் இரண்டு சீசனிக்கும் உள்ள வித்தியாசம். இது உங்களுக்கு ஒன்றும் தெரியாதது இல்லை கமல் சார்.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்த வாரம் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பார்வையாளர்களின் பங்களிப்பு சரியில்லை. அவர்கள் சரியாக ஓட்டு போடவில்லை என்று கமல் மூலம் தெரிவித்து நம் தலையில் மிளகாய் அரைத்துவிட்டார் பிக் பாஸ். வாவ், கடைசியில் பழியை தூக்கி பார்வையாளர்கள் மீது போட்டுவிட்டு ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டார். அதாவது அவர் மீது எந்த தவறும் இல்லை, எல்லா தப்பும் நம் மீது தான். நீங்க நடத்துங்க பிக் பாஸ்...

ஓட்டு

ஓட்டு

ஐஸ்வர்யாவுக்கு எதிராக 58 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதற்கு என்ன பதில் வைததிருக்கிறீர்கள் கமல் சார்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X