இது தான் உங்க டக்கா பிக் பாஸ்?: சாண்டியை வேறு கதறவிட்டுட்டாங்களே!
சென்னை:பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவை பார்ப்பவர்களால் இது தான் உங்க டக்கா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் தான் வெளியே சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுகிறார் என்பதை கூறாமல் சுற்றி வளைத்துப் பேசுகிறார் பிக் பாஸ்.
முதல் ப்ரொமோவில் காதல் பஞ்சாயத்து, இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் மதுமிதாவா?
மதுமிதா
பிக் பாஸ் வீட்டில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் என்ற மிகப் பெரிய அதியசத்தை, ரகசியத்தை கமல் ஹாஸன் தெரிவிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த முறை மதுமிதா காப்பாற்றப்பட்டபோது அவர் கதறி அழுதார். அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது சாண்டி மதுமிதாவை கலாய்த்துள்ளார்.
கிண்டல்
மதுமிதா காப்பாற்றப்பட்டார் என்று கமல் ஹாஸன் கூறியதும் சாண்டி மாஸ்டர் முந்திக் கொண்டு கதறி அழுது நடித்தது பார்வையாளர்களுக்கு பிடித்துள்ளது. ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் சாண்டி மாஸ்டரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது என்னடா நாம் அழலாம் என்று பார்த்தால் இந்த பயபுள்ள இப்படி பண்ணிட்டானே என்பது போன்று சாண்டியை பார்த்தார் மதுமிதா.

சாண்டி
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக உள்ளனர். இந்நிலையில் சாண்டி மாஸ்டரால் தான் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இப்படியே இருங்க சாண்டி, வனிதா கிளம்பிவிட்டார் என்று அவர் இடத்திற்கு ஏதும் வந்துவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெட்டிசன்ஸ்
சும்மா சொல்லக் கூடாது சாண்டி மாஸ்டர் அப்படியே மதுமிதா போன்றே நடித்துக் காண்பித்துள்ளார். அழுதது போதும் உட்காரும்மா என்று சித்தப்பு சரவணன் சொல்வாரோ. சாண்டி மதுமிதாவை கலாய்த்ததை வைத்து அதற்குள் மீம்ஸ் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











