பிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா
Recommended Video

சென்னை:நாம் ஞாயிற்றுக்கிழமை செய்யும் வேலையை யாஷிகா திங்கட்கிழமை செய்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பதின்வயது பெண்ணான அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அவர் மீது பார்வையாளர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஆண்
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் அறிமுகம் மட்டும் தான் என்பதால் யாஷிகா ஒன்றும் தனித்து தெரியவில்லை. ஆனால் ஆண் என்றால் என்ன என்று கேட்டு அதிர வைத்தார். அதன் பிறகு அவர் செய்த காரியத்தால் பிற போட்டியாளர்கள் முகம் சுளித்தனர்.

யாஷிகா
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் காலை 11 மணி வரை யாஷிகா குளிக்கவில்லை. ஏம்மா குளிக்கிற ஐடியா இல்லையா என்று ஜனனி உள்ளிட்டோர் கேட்டதற்கு போர் அடித்தால் குளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

போர்
யாஷிகா கூறியதை கேட்ட பார்வையாளர்களோ பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க எங்களுக்கும் போர் அடிக்கிறது. நீங்கள் வரும் பகுதியை மட்டும் பார்த்தால் கூட போர் அடிக்கிறது என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் போட்டுள்ளனர்.

போட்டியாளர்கள்
யாஷிகா குளிக்காமல் இருப்பதை பார்த்து பிற போட்டியாளர்கள் முகம் சுளித்தாலும் அவர் தண்ணீரை மிச்சப்படுத்துகிறார் போன்று என்று கூறி அவரை கலாய்த்தனர்.

அப்பாவி
யாஷிகா அப்பாவி என்று நினைத்தால் லூசாக இருக்கிறாரே என்று பார்வையாளர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள். பேட்டிகளில் எல்லாம் தெளிவாகப் பேசிவிட்டு பிக் பாஸ் வீட்டில் உல்டாவாக இருக்கிறாரே என்ற வருத்தம். கொஞ்சம் டைம் கொடுங்க பாஸ் இப்ப தானே நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











