Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
டைட்டான பேண்ட் போட்டு.. கால் மேல ஏறி உட்கார்ந்து.. கலக்கிய யாரடி நீ மோகினி நடிகைகள்!
சென்னை: ஆளுக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாத வகையில் உடம்பை இறுக்கிப் பிடிக்கும் வகையில் உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி போன்ற பேண்டை போட்டுக்கொண்டு கலக்கியுள்ளனர் இவர்கள்.
இந்த இருவரும் பிரண்ட் தானா இல்ல அதுக்கும் மேலயா என ரசிகர்களாக குழம்பிப் போகும் வகையில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகையும் வில்லியும் வெளியிட்ட வீடியோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஒரே சீரியலில் கதாநாயகியும் வில்லத்தனத்தை மிரட்டும் வில்லியும் நண்பர்கள் கலக்கி கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி சீரியல் தான்.
நல்ல தோழிகள்
இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் அனைவருமே ஒன்றாக பிரண்ட்ஸ் களாக தான் தான் இருக்கின்றனர். அதனால்தான் இவர்கள் அடிக்கடி அவுட்ங்க் சென்று வீடியோக்களையும் போட்டோக்களையும் எடுத்து குவித்து வருகின்றனர் .தற்போது கூட இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நட்சத்திராவும் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டியும் நெருங்கிய தோழிகள்.
டப்ஸ்மாஷ்
நட்புக்கு இலக்கணமாக ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் .அதில் இவர்களின் நட்பை பார்த்த சில நெட்டிசன்கள் நீங்கள் உண்மையிலேயே நண்பர்கள் தானா இல்ல அதுக்கும் மேல வா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதுவும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் சைத்ரா ரெட்டிக்கு திருமணம் முடிந்து இருக்கிறது.
கொஞ்ச நஞ்சமல்ல
திருமண கொண்டாட்டத்தில் இவர்களின் நண்பிகளின் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல கல்யாண மாப்பிள்ளையையும் விட்டு வைக்காமல் இவர்கள் பாடாய் படுத்திய வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இவர்கள் சூட்டிங் முடிந்ததும் காடு, மலை, கடற்கரை என ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களா அவர்கள்
இவர்களா அவர்கள் என ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அடையும் வகையில் அந்த அளவிற்கு ஜாலியாக இருந்து வருகின்றனர் .அதுவும் இந்த குரூப்பில் நட்சத்திரா சீரியலில் அமைதியின் சொரூபமாக வெண்ணிலா கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் எப்போதுமே குசும்பு பண்ணுவதில் கைதேர்ந்தவராம் .அது போல தான் தற்போது கூட இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் இன்னும் கலக்கியுள்ளனர்.
ஒட்டிய பேண்ட்
உடம்போடு ஒட்டிய பேண்டை போட்டுக்கொண்டு கலக்கலாக அன்ன நடை நடந்து இருக்கிறார். ஜாலியான சேட்டையை ரசிக்கும் ரசிகர்கள் கூட இவருடைய அழகையும் சேர்ந்து ரசித்து புலம்பி வருகின்றனர். அதுவும் இவர்களுடைய குரூப்பில் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் சபானா ,பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் ரேஷ்மா ,யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ,ஸ்ரீமதி இவர்கள் அனைவருமே நெருங்கிய தோழிகள்.
குளோஸ் நண்பிகள்
தற்போது இவர்கள் வெளியிட்ட வீடியோவில் சபானா மற்றும் மற்ற பெண்களையும் காணாமல் அவர்களுடைய ரசிகர்கள் அவர்களுடைய போட்டோக்களையும் கேட்டு வருகின்றனர். லேட்டஸ்டாக இவர்கள் எந்த போட்டோவையும் வெளியிடவில்லை என கவலையோடு தெரிவித்து வருகின்றனர் .ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் பேய் கதையை மையமாகக் கொண்டு எடுத்திருந்தாலும் தற்போது இது என்ன கதைக் களத்தோடு போய்க்கொண்டு இருக்கிறது என தெரியாமல் திணறும் ரசிகர்கள் இவர்களின் இந்த மாதிரி ஒரு வீடியோவை பார்த்ததும் என்ன நடக்குது என கேட்டு வருகின்றனர்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!