நீ கெளம்பு, மொதல்ல நீ கெளம்பு: யாஷிகா, ஐஸ்வர்யா இடையே 'பயங்கர' மோதல்
Recommended Video

சென்னை: நெருங்கிய தோழிகளான யாஷிகா, ஐஸ்வர்யா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தான் ஒரு பொய்க்கோழி என்பதை ஐஸ்வர்யாவே ஒப்புக் கொண்டுள்ளார்.
ஐஸ்வர்யா
நான் பொய் சொல்பவள் தான். நீ இங்கிருந்து கெளம்பு என்று ஐஸ்வர்யாவும், நீ இங்கிருந்து கெளம்பு என்று யாஷிகாவும் கோபமாக பேசிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யாவின் கோப குணத்திற்கு அவரின் ஹேர்கட் மிகவும் பொருத்தமாக உள்ளது. ப்ரொமோ வீடியோவில் பயங்கர மோதல் போன்று காட்டிவிட்டு நிகழ்ச்சியில் சொதப்பிவிடுவார்களே.
கோபம்
மும்தாஜ், விஜயலட்சுமி மோதும் மற்றொரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மும்தாஜ் விஜயலட்சுமியை பார்த்து என்னிடம் பேசாதீர்கள், உங்களுக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை என்று காட்டமாக கூறுகிறார். மகத் இருந்தபோது இந்த கோபம் எல்லாம் எங்கே போச்சு மும்தாஜ்?

பிக் பாஸ்
ஐஸ்வர்யா நாமினேட் ஆகியுள்ள இந்த நேரத்தில் மும்தாஜ் கோபப்படும் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார் பிக் பாஸ். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா மீண்டும் காட்டு கத்து கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்து பிக் பாஸ் காப்பாற்றினால் தான் உண்டு. இல்லை என்றால் ஐஸ்வர்யா நிலைமை கஷ்டம்.

காப்பாற்றுதல்
ஐஸ்வர்யா தன்னுடன் மோதியுள்ளதால் வீட்டின் தலைவியான யாஷிகா அவரை காப்பாற்ற மாட்டார் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். மகத் தனது காதலை ஒப்புக் கொண்டும் அவரை விட்டுவிட்டு ஐஸ்வர்யாவை காப்பாற்றியவர் தான் இந்த யாஷிகா. முதலில் இது உண்மையான சண்டையா இல்லை பரபரப்பை கூட்ட காட்டப்படும் சண்டையா என்பதை இன்று இரவு பார்த்தால் தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











