மகத்தை அடுத்து யாஷிகா, ஐஸ்வர்யா வலையில் விழுந்தது யார் தெரியுமா?

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 பற்றி மக்கள் அறியாத ரகசியங்கள்- வீடியோ

சென்னை: மகத் கிளம்பிய கையோடு யாஷிகா, ஐஸ்வர்யாவால் யாருக்கு ஏழரை பிடித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

சும்மா இருந்த மகத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும். அவர்கள் சொன்னபடி எல்லாம் ஆடியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத்.

மகத் சென்ற கையோடு அடுத்த அடிமையை தேடிய ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு ஆள் கிடைத்துவிட்டது.

நன்றி

நன்றி

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இந்த வாரம் நாமினேஷன் இல்லை. நாமினேட் ஆனாலே போதும் மக்கள் ஓட்டு போட்டு விரட்டிவிடுவார்கள் என்பதை தெரிந்து வைத்துள்ள யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு பிக் பாஸின் இந்த முடிவால் மிக்க மகிழ்ச்சி. உடனே தம்மடிக்கும் அறைக்கு சென்று இந்த வாரம் காப்பாற்றிவிட்ட பிக் பாஸுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா, யாஷிகாவை சக போட்டியாளர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. அவர்களுடன் யாரும் பெரிதாக பேசாமல் ஒதுங்கியே உள்ளனர். இருப்பினும் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் சோர்வடையாமல் அடுத்ததாக யாரை கவுத்தலாம் என்ற யோசனையில் இறங்கி கிட்டத்தட்ட வெற்றியும் கண்டுவிட்டனர். பாவம் நல்லா இருந்த அந்த சென்றாயன் தான் அவர்களிடம் சிக்கிய பலிகடா.

சென்றாயன்

சென்றாயன்

ஓரமாக உட்கார்ந்திருந்த யாஷிகா, ஐஸ்வர்யாவை பார்த்த சென்றாயன் அவர்கள் அருகே சென்று ஏத்தா இன்னைக்கு இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள். இன்று சோப்பு போட்டு குளித்தீர்களா என்று கேட்டார். இதுவே வேறு யாராவது கேட்டிருந்தால் ஐஸ்வர்யா பேயாட்டம் ஆடியிருப்பார். ஆனால் அடிமை இல்லாமல் அல்லாடும் நேரத்தில் தானாக வந்த சென்றாயனை பார்த்த மகிழ்ச்சியில் இருந்ததால் சும்மாவிட்டுவிட்டார்.

க்யூட்

க்யூட்

யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தங்களை அசிங்கப்படுத்திய சென்றாயனை பார்த்து சோ க்யூட் அண்ணா என்று கூறி அவர் தலையில் ஐஸ் பாரையே வைத்துவிட்டார்கள். இந்த வீட்டில் முதன்முதலில் உங்களை தவறாக புரிந்து கொண்டேன். நீங்க ரொம்ப பாவம். அடுத்தவர்கள் சொல்வதை கேட்கிறீர்கள். முதல் 3 வாரம் உங்களுக்கு கேம் புரிந்து நன்றாக செய்தீர்கள். இந்த வீட்டின் வின்னராக நீங்கள் ஆக வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்று ஐஸ்வர்யா, யாஷிகா கூறியதை கேட்டு சென்றாயனுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. வேண்டாம் சென்டு ஐஸ் வைத்து கவுத்திப்புடுவாங்க.

வின்னர்

வின்னர்

நான் அப்பா, அம்மா மீது சத்தியமாக சொல்கிறேன். நான் மகத், ஐஸ்வர்யா எல்லாம் சேர்ந்து நீங்க தான் வின்னர் என்று முடிவு செய்தோம் என்று ஒரே போடாக போட்டார் யாஷிகா. இந்த மேட்டர் எல்லாம் எப்பம்மா நடந்துச்சு? உங்களுக்காக நீங்க பேசுங்க. பேசியதால் தான் இன்று தலைவர் ஆகிவிட்டீர்கள் என்று தூபம் போட்டார் யாஷிகா. யாஷிகா, ஐஸ்வர்யா சொன்னதை எல்லாம் நிஜம் என்று நம்பிவிட்டார் சென்றாயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X