சென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா?: வாழ்றான்யா மனுஷன்
Recommended Video

சென்னை: சும்மா சொல்லக் கூடாது பிக் பாஸ் வீட்டில் சென்றாயன் வாழ்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் நேற்று சென்றாயனை படாத பாடு படுத்திவிட்டனர். அவர்களின் செல்ல விளையாட்டால் சென்றாயன் திண்டாடிப் போய்விட்டார்.
அவரின் திண்டாட்டத்தை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் காண்டாகிவிட்டனர்.

ஐஸ்வர்யா
யாஷிகா ஆனந்தும், ஐஸ்வர்யா தத்தாவும் சேர்ந்து சென்றாயனை கார்னர் செய்கிறார்கள். கார்னர் என்றால் கடுப்பேற்றுவது போன்று இல்லை. சும்மா செல்லமாக வம்பிழுக்கிறார்கள்.

சென்றாயன்
யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் கை கோர்த்துக் கொண்டு சிறை அருகே உள்ள சென்றாயனை நகர விடாமல் லாக் செய்ய அவரோ போங்கம்மா கூச்சமாக இருக்கிறது என்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ சென்றாயா, உங்க இடத்தில் நாங்க இல்லாமல் போய்விட்டோமே என்று ஃபீல் பண்ணுகிறார்கள். ஆமா, யாஷிகால்ல ஃபீல் பண்ணாம.

நழுவல்
யாஷிகா, ஐஸ்வர்யா பிடியில் இருந்து சென்றாயன் நழுவி வந்த விதத்தை பார்த்து அவர் மீது பொறாமைப்படாத சிங்கிள்ஸே இருக்க முடியாது. யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் சென்றாயன் போன்றே நடந்து கிண்டல் செய்தார்கள்.

பாடல்
சென்றாயனை பார்த்து கட்டிப்புடி கட்டிப்புடா என்று யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பாட அவர் நெளிய பார்வையாளர்கள் வயித்தெரிச்சல் அடைந்துள்ளனர்.

இடுப்பு
சென்றாயன் திரும்புகிறேன் என்ற பெயரில் யாஷிகா மீது மோத சிங்கிள்ஸின் இதயமெல்லாம் நொருங்கிவிட்டது. அந்த இரண்டு புள்ளைங்களும் சென்றாயனின் இல்லாத இடுப்பை தொட்டு தொட்டு விளையாடுகிறார்கள். யாஷிகா, ஐஸ்வர்யா சென்றாயனை சீண்டியது ரசிக்கும்படி இருந்தது.


Click it and Unblock the Notifications











