twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக 'விஸ்வாசி'யை கைவிட்ட பிக் பாஸ்

    By Siva
    |

    சென்னை: செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக பிக் பாஸ் தனது விஸ்வாசியை கைவிட்டுள்ளார்.

    பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள யாஷிகா, தாடி பாலாஜி, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 6 பேரில் இன்று இருவர் வெளியேற்றப்படுவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    அந்த இருவர் யார் என்று தெரிய வந்துள்ளது.

    வெளியேற்றம்

    வெளியேற்றம்

    இன்று வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல போட்டியாளர்களுக்கும் கூட தெரிந்துள்ளது. ஐஸ்வர்யாவின் நெருங்கி தோழியான யாஷிகா தான் இன்று வெளியேறுகிறார் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். சமூக வலைதளங்களிலும் இது தான் பேச்சு.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    சுயபுத்தி இல்லாமல் பேயாட்டம் ஆடும் ஐஸ்வர்யா யாஷிகாவின் உதவியால் தான் கொஞ்சமாவது ஸ்டெடியாக இருந்தார். யாஷிகா வெளியேறிவிட்டால் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமியிடம் சிக்கி என்ன பாடு படப் போகிறாரோ. யாஷிகா இல்லாமல் ஐஸ்வர்யாவால் நிச்சயம் சமாளிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

    தாடி பாலாஜி

    தாடி பாலாஜி

    விஸ்வாசியான தாடி பாலாஜியை வெளியேற்றுவது என்று முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ். ஆனால் தனது செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவின் தோழியை அவர் வெளியேற்றுவது தான் பார்வையாளர்களை லைட்டா அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சீசனின் இறுதி போட்டியில் ஆண்களாக இருந்தனர். இந்த சீசனில் பெண்கள் மட்டுமே உள்ளனர்.

    பிக் பாஸ்

    பிக் பாஸ்

    வீட்டில் அடுத்த வாரம் நான்கு பேர் இருந்தாலும் பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா மட்டுமே கண்ணுக்கு தெரிவார். இத்தனை வாரங்களாக பார்வையாளர்களின் கண்ணில் மண்ணை தூவி ஐஸ்வர்யாவை காப்பாற்றிய பிக் பாஸ் நிச்சயம் அவருக்கு தான் டைட்டில் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. நடிகை ஆர்த்தி சொன்னது போன்று பிக் பாஸும், டைட்டிலும், வீடும் ஐஸ்வர்யாவுக்கே சென்றுவிடுமோ?

    English summary
    Buzz is that Yashika and Balaji will get evicted from Bigg Boss 2 Tamil house tonight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X