இப்டி போய் கனவு காண்பீங்களா யாஷிகா!
யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
Recommended Video

யாஷிகா எவிக்ஷன் பற்றிய உங்கள் கருத்து என்ன?- வீடியோ
சென்னை : யாஷிகா தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போன்று கண்ட கனவு நிஜமாகிவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, யாஷிகா ஆனந்த் என இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறி உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளை சரிவர செய்யாமல் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர் பாலாஜி. இதனால் அவரது வெளியேற்றம், மக்களை அதிகம் பாதிக்கவில்லை.

ஆனால் யாஷிகாவின் நிலை அப்படி இல்லை. திறமையான போட்டியாளராக பிக் பாஸ் பட்டத்தை பெறுவதற்கு அதிக தகுதி உள்ள போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் யாஷிகா. அவர் இறுதி சுற்றுக்கு வராமல், தற்போது வெளியேறி இருப்பது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கமல் அவரது பெயரை அறிவிப்பதற்கு முன்னதாகவே தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போல் கனவு கண்டதாக யாஷிகா கூறினார். கடைசியில் அவரது கனவு பலித்தேவிட்டது.
இதற்கு முன் தரவரிசை பட்டியலில் தான் தான் மிகச்சிறந்த போட்டியாளர் என முதலிடத்தில் நம்பிக்கையுடன் அமர்ந்த யாஷிகாவிற்கு ஏன் இப்படி ஒரு கனவு வந்ததோ.


Click it and Unblock the Notifications











