twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா?

    By Siva
    |

    சென்னை: பள்ளி மாணவர்கள் போன்று இல்லாமல் யாஷிகா ஏ கன்டன்ட் பேசியுள்ளார்.

    பிக் பாஸ் வீட்டில் லக்சுரி டாஸ்காக கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் பள்ளி மாணவ, மாணவியர் போன்று நடிக்க வேண்டும். ரித்விகா தான் பள்ளியின் தலைமை ஆசிரியை.

    பள்ளிச் சீருடையை பார்த்த போட்டியாளர்கள் குஷியாகிவிட்டனர்.

    விளையாட்டு

    விளையாட்டு

    மாணவ, மாணவியர் போன்று ஆடை அணிந்து வந்த கையோடு ரிங்கா, ரிங்கா ரோசஸ் விளையாடினார்கள். பின்னர் பொன்னம்பலத்தை என்ஜினாக்கி ரயில் ஓட்டினார்கள். மாணவர்களாக நடிக்கச் சொன்னால் மென்டல் மாதிரி நடிக்கிறார்களே என்று பார்வையாளர்கள் சிரித்தது தனிக் கதை.

    டேனி

    டேனி

    ஐஸ்வர்யா, யாஷிகாவை அமர வைத்து திருக்குறள் பற்றி சொல்லிக் கொடுத்தார் டேனி. மொத்தம் என்ற வார்த்தையை மொட்டம் என்றார் யாஷிகா. ஐஸ்வர்யாவோ திருக்குறளை திருக்குதல் என்றார்.

    யாஷிகா

    யாஷிகா

    ஷாரிக் கிஸ் பண்ணினான் என்று கூறிய யாஷிகா அவன் கிஸ் பண்ணினால் கு... வந்துவிடும் என்று கூறி வயிற்றை தடவினார். இதை பார்த்த பாலாஜியும், பொன்னம்பலமும் என்ன கருமம்டா என்று நொந்து கொண்டனர்.

    பிரச்சனை

    பிரச்சனை

    குழந்தை பற்றி பொன்னம்பலம் பேசியதற்கு ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் தையா, தக்கா என்று குதித்தார்கள். ஆனால் தற்போது யாஷிகா பேசியது மட்டும் சரியாம். நாம் பேசினால் மட்டும் தான் பிரச்சனை செய்வார்கள் என்று பொன்னம்பலம் கூட பாலாஜியிடம் கூறி நொந்து கொண்டார்.

    English summary
    Yashika talked about getting pregnant during a luxury task in the Bigg Boss 2 house. She was in school uniform while talking big things.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X