ரூல்ஸை மாத்தி, ஸ்கிரிப்ட்டை மாத்தி ஐஸ்வர்யாவை ஒருவழியாக காப்பாற்றிய பிக் பாஸ்

By Siva

Recommended Video

Bigg Boss 2 | ஜனனி, மும்தாஜ் , ஐஸ்வர்யா சண்டை | Mumtaj Janani Aishwarya Fight

சென்னை: அனைவரும் எதிர்பார்த்தது போன்றே பிக் பாஸ் அவரின் செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டார்.

பிக் பாஸ் 2 வீட்டில் சும்மா எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு காட்டு கத்து கத்துகிறார் ஐஸ்வர்யா. கடந்த சில நாட்களாக மகத்துடன் சேர்ந்து ரொம்பவே ஆட்டம் போடுகிறார்.

மகத்தும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து மும்தாஜை டார்கெட் செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா நாமினேட் ஆகாமல் பார்த்துக் கொண்டிருந்தார் பிக் பாஸ். இந்நிலையில் ஐஸ்வர்யா ஓவராக கோபப்படுவதை காரணம் காட்டி சென்றாயன் அவரை நாமினேட் செய்தார். உடனே பிக் பாஸுக்கு தலையே சுத்திருச்சு போல. ஐஸ்வர்யா நாமினேட் ஆன வேகத்தில் விதிமுறையை மாற்றவிட்டார் பிக் பாஸ்.

யாஷிகா

யாஷிகா

வழக்கமாக வீட்டின் தலைவர் யாரையாவது நேரடியாக நாமினேட் செய்யலாம். ஆனால் நேற்று ஐஸ்வர்யா நாமினேட் ஆனதும் வீட்டின் தலைவரான யாஷிகாவுக்கு நாமினேட் ஆன நான்கு பேரில் ஒருவரை காப்பாற்றும் அதிகாரம் அளித்தார் பிக் பாஸ். சென்றாயன், தாடி பாலாஜி, மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா ஆகியோரில் யாராவது ஒருவரை நீங்கள் காப்பாற்றலாம் என்று யாஷிகாவிடம் கூறினார் பிக் பாஸ்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

கடந்த சில நாட்களாக மகத்திடம் தள்ளியே இருந்த யாஷிகா நேற்று அவர் அருகில் அமர்ந்துவிட்டார். பிக் பாஸ் கூறியதும் சிறிதும் யோசிக்காமல் தனது தோழி ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதாக தெரிவித்தார் யாஷிகா. யாஷிகா இதை தான் சொல்வார் என்று பிக் பாஸ் 2 பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும். பார்வையாளர்கள் எதிர்பார்த்தது போன்றே ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ்.

கோபம்

கோபம்

ஐஸ்வர்யாவை பற்றி பலரும் பல விஷயம் சொல்லிய பிறகும் அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது தான் ஐஸ்வர்யா முதல்முறையாக கோபப்பட்டுள்ளார். அதை கண்டிப்பாக மாற்றிக் கொள்வார். அதனால் நான் ஐஸ்வர்யாவை காப்பாற்றுகிறேன் என்றார் யாஷிகா. ஏம்மா யாஷிகா, ஐஸ்வர்யா இப்பத் தான் முதல் முறையாக கோபப்பட்டாரா? பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

நடந்தது

நடந்தது

பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக செய்து அவர்களை ஏமாற்றம் அடைய வைப்பதையே வேலையாக வைத்துள்ளார் பிக் பாஸ். இம்முறை தான் பார்வையாளர்கள் எதிர்பார்த்ததை செய்திருக்கிறார். அதற்காக பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பவில்லை. ஐஸ்வர்யாவை பிக் பாஸுக்கு பிடிக்கும் என்பதால் அவர் நிச்சயம் காப்பாற்றிவிடுவார் என்று எதிர்பார்த்தது தான் நடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X