கலவர பூமியாக இருந்த பிக்பாஸ் வீட்டை நீண்ட நாட்களுக்குப் பிறகு கலகலக்க வைத்த அந்த டாஸ்க்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 12: Promo 1: காதலிக்கும் பையன் சொல்வதை கவனிப்பேன் Sakshi- வீடியோ

சென்னை: கடந்த சில நாட்களாக கலவரமாக பூமியாக இருந்த பிக்பாஸ் வீடு நேற்றைய டாஸ்க்கின் மூலம் கலகலப்பானது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் விஜய் டிவியில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளேயே பிக்பாஸ் வீடு கலவர பூமியாகிவிட்டது.

பிக்பாஸ் வீட்டின் மொத்த பிரச்சனைக்கும் வனிதாவும் சாக்ஷியும் தான் காரணம் என்பது பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இருவரையும் கழுவி ஊற்றிவருகின்றனர்.

ஒருவரும் கேட்கவில்லை

ஒருவரும் கேட்கவில்லை

மதுமிதாவையும் மீரா மிதுனையும் கார்னர் செய்து பாடாய் படுத்தியது வனிதா அன்ட் கோ. மதுமிதாவுடன் வனிதா அன்ட் கோ சண்டை போட்ட போது ஒரு ஆண் கூட என்னவென்று கேட்கவில்லை.

வனிதா கும்பலுக்கு சப்போர்ட்

வனிதா கும்பலுக்கு சப்போர்ட்

அப்போது கோபித்துக்கொண்டு சென்ற லாஸ்லியாவை சமாதானம் செய்ய பாத்ரூமுக்கு ஓடிய கவின், மதுமிதாவிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அவர் மட்டுமல்ல வீட்டின் கேப்டனாக இருந்த மோகன் வைத்யா கூட வனிதா கும்பலுக்கு தான் சப்போர்ட்டாக இருந்தார்.

தனிமையான மது

தனிமையான மது

சேரன் மட்டும்தான், மதுமிதாவிடம் எதைப் பற்றியும் பேசாதே அமைதியாக போய் தூங்கு என்றார். வனிதா, சாக்ஷி, ஷெரின், அபிராமி என அனைவரும் கட்டம் கட்டி மதுமிதாவை கண்ட மேனிக்கு பேசினர். ஒற்றை ஆளாக நின்று போராடிய மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் டாஸ்க்

இந்நிலையில் ஆண் போட்டியாளர்கள் யாரை எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறியும் வகையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களை போல நடிக்குமாறு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

அப்லாஸை அள்ளிய தர்ஷன்

அப்லாஸை அள்ளிய தர்ஷன்

அதில் வனிதாவை போல அமேஸிங் நடிப்பை வெளிப்படுத்தினார் தர்ஷன். அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைப்பது, எப்போதும் கத்திக்கொண்டே இருப்பது, நான் வீட்டின் கேப்டன் என பெருமை பீற்றிக்கொள்வது என வேற லெவலில் நடித்து அப்லாஸை அள்ளினார் தர்ஷன்.

சரவணன் செம..

சரவணன் செம..

இதேபோல் அபிராமியாக நடித்த முகென் எப்போதும் அங்கும் இங்கும் ஓடுவதை போலவும், கிறுக்குத்தனமாக நடந்துகொள்வதை போலவும் நடித்துக்காட்டினார். ஃபாத்திமா பாபு போல் நடித்துக்காட்டிய சரவணன் செம.

தர்ஷனுக்கு முதல் பரிசு

தர்ஷனுக்கு முதல் பரிசு

அடுத்து சாண்டி மீராவை போலவும், மோகன் வைத்யா மதுமிதாவை போலவும் நடித்துக்காட்டினர். கவின் மிகக் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு ஷெரினை போல நடித்துக்காட்டினார். இந்த டாஸ்க்கில் முதலிடம் பிடித்த தர்ஷனுக்கும் இரண்டாம் இடம் பிடித்த சரவணனுக்கும் இயக்குநர் சேரன் பரிசுகளை வழங்கினார்

சிரிப்பு சத்தம்

சிரிப்பு சத்தம்

இதனால் பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாள் சண்டை சத்தத்திற்கு பிறகு நேற்று சிரிப்பு சத்தம் கேட்டது. பிக்பாஸின் இந்த டாஸ்க்கை, ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக ரசித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X