ஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா?

By Siva

Recommended Video

தொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன?- வீடியோ

சென்னை: மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை காரணமாக சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

சின்னத்திரை மற்றும் பெரிய திரையை சேர்ந்த பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவை எடுக்கிறார்கள்.

சிலர் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இன்றும் கூட ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரியங்கா

பிரியங்கா

வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த பிரியங்கா சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இன்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தற்கொலை

டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்த சபர்ணா தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

வம்சம்

வம்சம்

வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த முரளி மோகன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து நம்மை எல்லாம் சிரிக்க வைத்த சோபனா மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

விஷம்

விஷம்

நடிகர் சாய் பிரசாந்த் மனஅழுத்தம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சாய் பிரசாந்த்.

உயிர்கொல்லி

உயிர்கொல்லி

மனஅழுத்த பிரச்சனையை மறைத்துக் கொண்டு சீரியல்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் கலைஞர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது நல்லது. மனஅழுத்த பிரச்சனையை கவனிக்காவிட்டால் தற்கொலையில் முடியும் என்று மனஅழுத்தத்தில் இருந்து மீண்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X