Just In
- 11 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 47 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- News
விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
- Sports
இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நெட்பிளிக்ஸில் டாப் 10 எது தெரியுமா.. லிஸ்ட் போட்டிருக்காங்க பாருங்க
சென்னை: ஓடிடி தளமான நெட்பிளிக்ஸிலும் இப்போது டாப் டிரெண்டிங் எதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. யூடியூபில் உள்ள டிரெண்டிங் பட்டியலைப் போலவே இதிலும் பட்டியல் போடுகிறார்கள்.
இந்தப் பட்டியலும் கூட நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். அதாவது இந்தியாவில் எது டாப் 10, அமெரிக்காவில் எது டாப் 10 என்று வகுத்துப் போடுகிறார்கள்.
இன்டர்நெட் இல்லாத இடம் கூட இருக்கலாம்.. ஆனால் நெட் பிளிக்ஸ் இல்லாத வீடு இருக்காது. அப்படி ஒரு ஆக்கிரமிப்பு தளம்தான் நெட் பிளிக்ஸ். சும்மா சொல்லக் கூடாது. அருமையான தொடர்கள், படங்களை இங்கு பார்க்க முடிகிறது.

நெட்பிளிக்ஸ் வளர்ச்சி
நெட்பிளிக்ஸ் வளர்ச்சி நாளுக்கு நாள் இமயம் தொட்டுக் கொண்டிருக்கிறது. படு வேகமான வளர்ச்சியை இந்தியாவிலும் அது கண்டு வருகிறது. இன்றைய இளசுகள் எல்லாமே நெட் பிளிக்ஸ் இல்லாமல் நடமாடுவதே இல்லை. அந்த அளவுக்கு இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பல முக்கிய திரை நட்சத்திரங்கள் கூட நெட் பிளிக்ஸ் பக்கம் ஒதுங்கி வருகின்றனர்.

டிரெண்டிங் பட்டியல்
வழக்கமாக யூடியூபில் எது டிரெண்டிங்கில் உள்ள வீடியோ என்று பட்டியல் வரும். இப்போது அதேபோல நெட்பிளிக்ஸும் டிரெண்டிங் தர ஆரம்பித்துள்ளது. அதாவது டாப் 10 தொடர்கள், படங்கள் எது என்று அது லிஸ்ட் தருகிறது. இதை வைத்து எந்தத் தொடர் அல்லது படம் டாப்பில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். இதை புதிதாக ஆரம்பித்துள்ளது இந்த நெட்பிளிக்ஸ்.

கோட்சூட் ஏனோதானோ
அதாவது கோட்சூட்போட்டுக்கிட்டு.. கால் மேல் கால் போட்டபடி எதுகை முனையில் "ஓசை" படம் மொத்தத்தில் சத்தம் இல்லைன்னு சொல்லி முடிப்பாங்களே அந்த எனோ தானோ விமர்சனம் இதில் இருக்காதுன்னு நம்பலாம். ஏன்னா இளசுகளின் நெட் ஃபிளிக்ஸ் முக்கியத்துவம் அப்படி. இந்த டிரஸ்டை கொண்டாடி வரும் நெட்ஃபிளிக்ஸ் அவர்களை ஏமாற்றாமல் இருக்கிறது.

டாப் 10
அதன்படி ஒவ்வொரு நாட்டிலும்,அதாவது இந்தியா என்றால் அங்கு எது டாப்பில் ஓடுகிறது என்று லிஸ்ட் தரும். 10 மோஸ்ட் பாப்புலர் சீரிஸ், டாப் 10 படங்கள் என இதை வகைப்படுத்தி டிரெண்டிங் தருகிறது. இதன் மூலம் எது டாப்பில் இருக்கு என்று தெரிந்து கொள்ள முடியும். அந்தந்த தொடர் மற்றும் படங்களின் லேபிளுக்கு மேலே இதுதொடர்பான பேட்ஜ் இருக்கும். அதாவது அது 1ல் இருக்கா, 2ல் இருக்கான்னு நம்பர் போட்டு நமக்கு அடையாளம் காட்டுவார்கள்.

முயல்கிறோம் விழைகிறோம்
"நாங்கள் நெட்பிளிக்ஸை மேலும் மேலும் மேம்படுத்த முயல்கிறோம். சிறந்ததைத் தர விழைகிறோம். அதன் ஒரு பகுதிதான் இது. இதை வெற்றிகரமாக மெக்சிகோவிலும், இங்கிலாந்திலும் கடந்த 6 மாதமாக அமல்படுத்தியுள்ளோம். இப்போது பிற பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்தவுள்ளோம்" என்று நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கேமரூன் ஜான்சன் கூறியுள்ளார்.

இந்தியாவில் எது டாப் 10
சரி இப்போது இந்தியாவில் எது டாப் 10ல் இருக்குன்னு சொல்லனும் இல்லையா.. இதோ இதுதாங்க இப்போதைக்கு டாப் 10 தொடர்கள்.
The Body, Panipat, Taj Mahal 1989, Narcos: Mexico, The Last Thing He Wanted, Locke & Key, F.R.I.E.N.D.S., 12 Strong, Sex Education: Season 2, To All the Boys P.S. I Still Love You.