ஹன்சிகாவை 'கரெக்ட்' பண்ண ஒரு பூங்கொத்தும், குட்டியூண்டு சாக்லேட்டும் போதுமாம்!
என்னை கரெக்ட பண்ண ஒரு பூங்கொத்தும் சின்ன கிட்கேட் சாக்லெட்டும் போதும் நான் அப்படியே உருகிப் போயிருவேன் என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மொத்வானி.
சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹன்சிகா, தன்னுடைய திரை உலக அனுபவங்களையும், பெர்சனல் பக்கங்களையும் பகிர்ந்து கொண்டார்.
மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 30 பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யும் ஹன்சிகா ஆண்டுதோறும் பெண் குழந்தைகளின் கல்விக்கும், உணவு, உடை, தங்குமிடத்திற்கும் உதவி செய்வதாக கூறினார். ஹன்சிகா சொன்ன விசயங்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

மனசும் அழகுதான்
நடிகைகள் எல்லோருமே மேக் அப் போட்டோமா நடித்தோமா, தூங்கினோமா என்றுதான் இருப்பார்கள். ஆனால் நடிகை ஹன்சிகா நடிப்பதோடு நின்று விடாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் அதற்கு காரணம் அவரது அம்மா ஒரு டாக்டராம்.

குழந்தை நட்சத்திரம்
சிறிய வயதில் இருந்தே நடிக்க வந்துவிட்ட ஹன்சிகா 15 வயதில் கதாநாயகியாகிவிட்டாராம். சிறுவயதில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்ததை பெருமையாக சொன்னார். அவருடன் கதாநாயகியாக நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என்று கூறினார் ஹன்சிகா.

எல்லோரையும் பிடிக்கும்
தமிழில் எந்த ஹீரோ உடன் நடிக்க பிடிக்கும் என்று கேட்டதற்கு எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி தப்பித்தார். அதேபோல் நடிகைகளில் எந்த நடிகையை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, யாரையும் நான் போட்டியாக நினைக்கவில்லை என்று கூறினார் ஹன்சிகா.

சந்தானத்தின் ஏஞ்சலீனா ஜூலி
நடிகர் சந்தானத்துடன் பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, செல்லமா சாண்டி என்று கூறினார். தன்னை, ஏஞ்சலீனா ஜூலி என்று சந்தானம் அழைப்பார் என்று கூறி, நடிக்க விடாமல் காமெடி செய்வார் என்று கூறினார்.

ரொம்ப சந்தோசம்
சின்ன குஷ்பு என்று தன்னை ரசிகர்கள் அழைப்பதைக் கேட்டு ரொம்ப சந்தோசப்படுவதாக கூறினார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி கூறிய டயலாக் கேட்டு சந்தோசப்பட்டதாகவும் கூறினார்.

ஒரு பூங்கொத்து, சின்ன சாக்லேட்
உங்களை காதலிப்பவர் எப்படி இருக்கணும் என்று கேட்டதற்கு பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க வில்லை, எனக்கு ஒரு பூங்கொத்தும், சின்ன கிட்கேட் சாக்லேட்டும் வாங்கிக் கொடுத்தால் நான் உருகிப் போய்விடுவேன் என்றார். பேங்க் பேலன்ஸ் பார்த்து காதலிக்க மாட்டேன், மனிதாபிமானம் இருக்க வேண்டும் என்றார்.

தொகுப்பாளரை பஞ்சராக்கிய ஹன்சிகா
இதைக் கேட்ட தொகுப்பாளர் போகும் போது உங்களுக்கு நான் பூங்கொத்தும், சாக்லேட்டும் வாங்கித் தருகிறேன் என்று கூறினார். அதற்கு ஹன்சிகா, தாங்ஸ் அண்ணா என்று கூறி அவரை பஞ்சராக்கினார்.


Click it and Unblock the Notifications











