»   »  சினேகா, அம்பிகா, காயத்ரி ரகுராம் உடன் நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கும் ஜீ டான்ஸ் லீக்

சினேகா, அம்பிகா, காயத்ரி ரகுராம் உடன் நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கும் ஜீ டான்ஸ் லீக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியில் ஜூலை 1 முதல் சனி தோறும் மாலை 8:30 முதல் 10 மணி வரை "ஜீ டான்ஸ் லீக்" ஒளிபரப்பாக உள்ளது. இதில் நடுவர்களாக சினோகா, அம்பிகா, காயத்ரி ரகுராம் பங்கேற்க உள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸிங் கில்லாடிஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகள் நேயர்களை பெரும் உற்சாகப்பட வைத்தன.

Zee Dance League starts from July 1 host on Sneha

இந்நிகழ்ச்சிகளின் மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து, "ஜீ டான்ஸ் லீக்" நிகழ்ச்சி ஜூலை 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

உங்களின் உள்ளம் கவர்ந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நடனத் திறமையை பறைசாற்ற உள்ளனர்.

பூவே பூச்சூடவா, தலையணை பூக்கள், ரெக்க கட்டி பறக்கும் மனசு, ஜூனியர் சீனியர், அதிர்ஷ்டலக்ஷ்மி, மெல்ல திறந்தது கதவு, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சவாலான நடனப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

Zee Dance League starts from July 1 host on Sneha

பிரபல நடிகைகள் சினேகா, அம்பிகா, பிரபல நடனக் கலைஞர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ரசிகர்களை கொள்ளை கொள்ளச் செய்யவுள்ள இந்நிகழ்ச்சியில் இறுதியாக வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

இந்நிகழ்ச்சியை, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான தீபக் தொகுத்து வழங்க உள்ளார்.

ஜீ டான்ஸ் லீக், ஜூலை 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. காணத் தவறாதீர்கள்.

English summary
New dance show "Zee Dance League" starts from July 1 next Saturday at 8.30pm

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil