»   »  டார்லிங்... டார்லிங்... ஜீ தமிழில் ரொமான்டிக் காமெடி- சிரிச்சிக்கிட்டே உறங்கலாம்

டார்லிங்... டார்லிங்... ஜீ தமிழில் ரொமான்டிக் காமெடி- சிரிச்சிக்கிட்டே உறங்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சி, டார்லிங் டார்லிங் என்ற புத்தம் புதிய ரொமான்டிக் காமெடி தொடர் வரும் டிசம்பர் 12 முதல் - திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

எல்லா மனிதர்கள் வாழ்க்கையிலும் என்ன தான் சொத்து சுகம் இருந்தாலும் அடுத்தவர்களைப் பார்த்து நமக்கு அந்த விஷயம் இல்லாமல் போய்விட்டதே என்று ஆதங்கப் படத்தான் செய்வோம். இக்கரைக்கு அக்கரை பச்சை போல எல்லோருக்கும் ஒரு வித ஏக்கம் இருக்கும்.

இதில் எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் இரு குடும்பாத்தாரின் வாழ்க்கையில் நடக்கும் குழப்பங்களும், அக்குழப்பத்தினால் ஏற்படும் கலவரங்களும் நகைச்சுவையாக சொல்லப்படுகிறது.

கானா பாலா டைட்டில் பாடல்

டார்லிங் டார்லிங் சீரியலில் கானா பாலா டைட்டில் பாடல் பாடியுள்ளார். இக்கரைக்கு அக்கறை பச்சை... எதிர்த்த வீட்டில ஏன்டா கண்ணை வச்ச என்று தொடங்கும் பாடல் சீரியலின் கருவை உணர்த்துகிறது.

டார்லிங்... டார்லிங்

டார்லிங்... டார்லிங்

நட்ராஜ் உள் ஆடைகள் விற்கும் ஒரு வியாபாரி. அவரது மனைவி ருக்மணி நடை உடையிலும், பேச்சிலும் பட்டிக்காட்டு மணம் மாறாத பெண். நட்ராஜ் வீட்டிற்கு எதிர் வீட்டில் புதிதாக குடிவரும் விக்கி ஒரு சாப்ட்வேர் கன்ஸல்டண்ட். அவரது மனைவி அனிதா படித்த ஒரு நாகரீகமான மங்கை. விக்கியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள்.

எதிர் வீட்டு பெண்கள்

எதிர் வீட்டு பெண்கள்

விக்கி ஒரு குடும்ப பாங்கான அடக்க ஒடுக்கமான பெண்ணிற்காக ஏங்குகிறான். நட்ராஜ் தனது வாழ்க்கையில் படித்த அறிவான பெண்ணிற்காக ஏங்கி வாழ்கிறான். இருவரும் தங்களது மனம் கவர்ந்த எதிர் எதிர் வீட்டு பெண்களிடம் நல்ல பெயர் எடுக்கும் முயற்சிகளும், அதனால் ஏற்படும் கலாட்டாக்களும் நகைச்சுவையாக சொல்லப்படுகிறது.

ராம்ஜி - சித்ரா

ராம்ஜி - சித்ரா

விக்கி கதாபாத்திரத்தில் நடிகர் ராம்ஜியும், அவரது மனைவி அனிதா கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி சித்ராவும், நட்ராஜ் கதாபாத்திரத்தில் வசந்த் கோபியும், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிகையும் தொகுப்பாளினியுமான நந்தினியும் நடிக்கின்றனர்.

மாமியார் நளினி

மாமியார் நளினி

நந்தினியின் மாமியாராக பிரபல நடிகை நளினியும் நடிக்கிறார்கள். குடும்பத்துடன் காணவேண்டிய நகைச்சுவைத் தொடர் டார்லிங் டார்லிங் என்கின்றனர் சீரியல் தயாரிப்பாளர்கள். சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீரியலில் மாமியாராக நடித்த நளினி, டார்லிங் டார்லிங் சீரியலில் மாமியாராக நடித்து கலக்க வருகிறார்.

English summary
Popular entertainment channel Zee Tamil is all set to air a new serial titled Darling Darling. The serial is a said to be a romantic comedy and will be aired from December 12 , Monday to Friday on Zee Tamil. The channel posted on its micro-blogging page, "A romantic comedy series like no other | Darling Darling, starts December 12th, only on your favourite channel #Zeetamil." The show will be aired at 10 pm.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil