ஒரு மஞ்சள் கயிறுதான் கட்டினேன்.. மொத்த குடும்பமும் என்னை அடிக்குது.. புலம்பும் சீரியல் நடிகர்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்படும் மிகவும் முக்கியமான சீரியல் இது. இந்த சீரியலில் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டு உள்ள விஷயம் என்றால் வீரா - சிவபாலன் திருமணம் தான். ஏற்கனவே வீரா சீரியலில் வீராவுக்கு மாறன் எப்படி கடைசி நேரத்தில் தாலி கட்டினாரோ, அதே போல் அண்ணா சீரியலில் வீராவுக்கு சிவபாலன் தாலி கட்டினார். இதனால் சிவபாலனின் அப்பா பெல்ட்டால் அடிக்க, வீராவின் அண்ணன் சண்முகம் வெட்டுவேன் குத்துவேன் என இருக்கிறார். வீராவோ சிவபாலனை சிவ கட்டையால் அடித்தே துவம்சம் செய்கிறார்.

இப்படி இருக்கும்போது வீராவும் சிவபாலனும் இணைந்து கலாட்டா பிங்க் யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்கள். அதில் அவர்கள் இருவரும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். அதாவது சிவபாலன் பேசுகையில், ஒரு மஞ்சள் கயிறை கட்டிவிட்டு நான் திரும்பும் இடத்தில் எல்லாம் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறேன். பெல்ட்டில் அடிக்கிறார்கள், சீவகட்டையில் அடிக்கிறார்கள். பைத்தியக்கார குடும்பத்திடம் வந்து நான் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

அந்த காட்சி படமாக்குவதற்கு முன்னர், இது நம்ம சீன், நீ இறங்கி அடி என சிவபாலன் என்னிடம் சிவபாலன் கூறியதால்தான் அடித்தேன். முதலில் நான் சிவபாலனை அடித்தபோது எனக்கு கை வலிக்கவில்லை. அதன் பின்னர் வலிக்கும் என நினைத்து நான் அடிக்காமல் இருந்தேன். ஆனால் இயக்குநர் படவேயில்லை நன்றாக அடி எனக் கூறினார். அதனால் தொடர்ந்து அடித்தேன்" என்று கூறுகிறா வீரார். இவர்களின் திருமணத்திற்குப் பின்னர் மொத்த சீரியலுமே வேறு ஒரு பாரிணாமம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











