ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜீ தமிழ் சேனல்.. எதுக்காகன்னு தெரியுமா?
சென்னை : விஜய் டிவிக்கு இணையாக தற்போது சன் டிவி, கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களும் சிறப்பான பல தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன.
குறிப்பாக ஜீ தமிழில் சிறப்பான பல தொடர்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாக உள்ளன.
இந்நிலையில் இந்த சேனலின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரை விரைவில் சேனல் முடித்து வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சீரியலில் கவனம்
நிகழ்ச்சிகளுக்கு இணையான கவனத்தை ஒவ்வொரு சேனலும் சீரியல்களுக்கும் கொடுத்து வருகின்றன. இந்த சீரியல்கள் மற்றும் அதன் டிஆர்பி ரேட்டிங் ஆகியவற்றைக் கொண்டு சேனலின் வருமானமும் அதிகமாக உள்ளது. இந்த ரேட்டிங்கை அதிகரிக்க ஒவ்வொரு சேனலும் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றன.

முன்னணி சீரியல்கள்
சீரியல்கள் என்று எடுத்துக் கொண்டால் சன் டிவியும் விஜய் டிவியும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக சன் டிவியின் கயல், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்கள் இதில் முதலிடங்களில் உள்ளன. இந்நிலையில் ஜீ தமிழ், கலர்ஸ் சேனல்களும் தங்களது சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

சீரியல்களில் கவனம் செலுத்தும் ஜீ தமிழ்
குறிப்பாக ஜீ தமிழின் சீரியல்கள் தற்காலங்களில் அதிக கவனத்தை பெற்று வருகின்றன. இதில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் அன்பே சிவம் என்ற சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலை விரைவில் முடிக்க உள்ளதாக சேனல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அன்பே சிவம் தொடர்
விவாகரத்து செய்த ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையில் ஏற்படும் காதல், மற்றும் அதை சுற்றிய கதைக்களத்தில் இந்தத் தொடர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதனிடையே அதிகமான ரசிகர்களை தங்களது சேனலின் பக்கம் இழுக்கும் வகையில் ஜீ தமிழ் தற்போது பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறது.

புதிய தொடர்கள்
அதன் ஒரு பகுதியாக புதிதாக 2 சீரியல்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகவுள்ள இந்த புதிய தொடர்களை ஒளிபரப்பும் வகையில் தற்போது அன்பே சிவம் சீரியலை விரைவில் முடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலை விரும்பிப் பார்த்துவரும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜீ தமிழ் திட்டம்
விஜய் டிவி உள்ளிட்ட சேனல்கள் புதிய புதிய தொடர்களை அதிகமாக களமிறக்கி வருகின்றன. ஒரு தொடர் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது என்றால் அதன் சீசன் 2வையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜீ தமிழும் புதிய தொடர்களை ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications











