Seetha raman: தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஜீ தமிழோட பரிசும் கிடைக்கும் - போட்டிக்கு நீங்க ரெடியா?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் எப்போதும் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏராளமான ரசிகர்களையும் இந்த நிகழ்ச்சிகள் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் டிவி சேனல் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜீ தமிழ் சேனலின் சீரியலில் பரிசப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும், வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும் என்பது தமிழர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சீரியல்களிலும் மக்கள் எதிர்பார்த்தபடி அதிரடியான கதைக்கள மாற்றங்கள் இடம் பெற உள்ளன. இது குறித்து ப்ரைம் டைம் சீரியல் நாயகிகள் இடம்பெறும் ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பொங்கலை மக்கள் மேலும் மகிழ்ச்சிகரமான கொண்டாடுவதற்காக சீதா வீட்டு சீதனம் என்ற பெயரில் பரிசுப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் சேனல்: முதலிடத்தை பெறுவதற்காக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி என அடுத்தடுத்த சேனல்களுக்குள் அதிகமான போட்டிகள் காணப்படுகின்றன. தங்களின் சேனல்களில் நிகழ்ச்சிகள், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அடுத்தடுத்த விஷயங்களை சேனல்கள் களமிறக்கி வெற்றி கண்டு வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் சேனலிலும் தொடர்ந்து ரசிகர்களை சிறப்பாக கவரும்வகையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், சிரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மக்களுக்கு வித்தியாசமான நிகழ்ச்சிகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் பொங்கலையொட்டியும் பரிசுப் போட்டிகளையும் ஜீ தமிழ் அறித்துள்ளது.
சீதா வீட்டு சீதனம் பரிசுப்போட்டி: ஜனவரி மாதம் பிறந்து பொங்கல் கொண்டாட்டங்களையும் முடித்துள்ள நிலையில் ஜீ தமிழ் தன்னுடைய சேனலில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், சீரியல்களில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சீதாராமன் தொடரையொட்டி சீதா வீட்டு சீதனம் என்ற பெயரில் ஜீ தமிழ் சேனல், பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அரை சவரன் தங்க மோதிரம் ஆகியவை பொங்கல் சீதனமாக வழங்க உள்ளது ஜீ தமிழ். இதையொட்டி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியல் தொடரில் இறுதியில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு சரியான பதிலை சொல்லி இந்த சீதனத்தை மக்கள் வென்று செல்லலாம்.
சீதாராமன் பிரமோ: தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு 5 கேள்விகள் வீதம் ஐந்து அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் இந்த சீதனத்தை பெற உள்ளனர். சீதா ராமன் சீரியல் நாயகி பிரியங்கா விநாயகர் கோவில் ஒன்றில் பொங்கலை வைத்து இந்த வருடம் மக்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த போட்டி குறித்த அறிவிப்பையும் கொடுத்துள்ளார். ஜீ தமிழ் பொங்கல் வைத்து வியக்க வைக்கும் பரிசுடன் போட்டி ஒன்றையும் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் சீதாராமன் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்துள்ளது.
பரிசுப்போட்டி அறிவிப்பு: இந்நிலையில் பொங்கல் பரிசுடன் சீரியலை மேலும் ரசிகர்களிடையே அதிகமாக கொண்டு செல்லும் நோக்கத்தில் தற்போது பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சிரியலில் சீதாவாக பிரியங்கா நல்காரி நடித்து வந்தார். இந்நிலையில் அவர் திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆனதால் சீரியலில் இருந்து விலக, தற்போது சீரியலில் பிரபல நடிகை பிரியங்கா சீதாவாக இணைந்துள்ளார். அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து சேனலின் முன்னணி சீரியலாக சீதாராமன் சீரியல் இருந்துவருகிறது. இந்நிலையில் சீதா வீட்டு சீதனம் பரிசுப்போட்டி இந்த சீரியலுக்கும் மேலும் வண்ணத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











