Saregamapa:மதம் கடந்த காதல் திருமணம்.. ஏற்று கொள்ளாத பெற்றோர் -கதையை கேட்டு அபிராமி செய்த விஷயம்!

சென்னை: ஜீ தமிழ் சேனலின் பிரபலமான நிகழ்ச்சியாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 மாறியுள்ளது. ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 23 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Zee tamil channels Saregamapa little champs season 3 show Abhirami impresses everyone

நிகழ்ச்சியில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த கனிஷ்கர் பங்கேற்று ரசிகர்களையும் நடுவர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

சரிகமப நிகழ்ச்சியில் அபிராமி செய்த விஷயம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3. கடந்த சில வாரங்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் இந்த நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆன நிலையில் தற்போது 23 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்தும் ஒரு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கனிஷ்கர் என்பவரும் கலந்துக் கொண்டுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற பக்தி பாடல்கள் ரவுண்டில் ஜோக்தா அக்பர் படத்தில் இடம்பெற்றுள்ள ஹாஜாவோ ஹாஜா என்ற பாடலை பாடி ரசிகர்களை மட்டுமில்லாமல் நடுவர்களையும் மெய் சிலிர்க்க வைத்தார் கனிஷ்கர். நடுவர்கள் இவரை பாராட்டித் தள்ளினர். இதையடுத்து மேடைக்கு வந்த கனிஷ்கரின் பெற்றோர், தங்களது சோகக்கதையை பகிர்ந்தனர்.

Zee tamil channels Saregamapa little champs season 3 show Abhirami impresses everyone

முஸ்லீம் மதத்தை சேர்ந்த கனிஷ்கரின் அம்மா காதலுக்காக மதத்தை தூக்கி போட்டு விட்டு கனிஷ்கரின் அப்பாவை கரம் பிடித்துள்ளார். திருமணமாகி குழந்தை பிறகும் அவரது பெற்றோர் அவரை ஏற்க மறுத்துள்ளனர். அம்மா, அப்பா தன்னுடன் பேசி 17 வருஷம் ஆனதாக கண்ணீருடன் அவர் தனது கதையை பகிர்ந்தார். இந்த சரிகமப மேடையில் காதல் திருமணம் செய்து கொண்டதற்க்காக தன்னுடைய பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் அவர்.

மேலும் காதல் திருமணத்தால் பெற்றோர்கள் கை விட்டதால் எங்களது வீட்டில் எந்த மதத்தின் கடவுள் புகைப்படங்களையும் வைத்து கொள்ளவில்லை, கனிஷ்கருக்கும் கடவுள் இல்லை என்று சொல்லி தான் வளர்த்து வருகிறோம் என தெரிவித்தனர். இவர்களின் கதையை கேட்ட அபிராமி மேடைக்கு வந்து கட்டி தழுவி ஆறுதல் கூறி இவர்களுக்காக அன்பே சிவம் படத்தில் இடம்பெறும் யார் யார் சிவன் என்ற பாடலை பாடினார்.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மேடையில் அபிராமி பாடிய முதல் பாடல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்று தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஏராளமான திறமைகளுக்கு வெளிச்சம் போட்டுத் தந்து வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி. இதேபோல இலங்கையிலிருந்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இணைந்துள்ள தோட்டத் தொழிலாளியின் மகள் அசானிக்கும் இந்த நிகழ்ச்சி சிறப்பான வெளிச்சத்தை தந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X