பார்க்குறவங்களை எல்லாம் சொந்தமா நினைச்சு பழகும் ’சரிகமப’ தக்‌ஷிதாவுக்குள் இப்படியொரு சோகக் கதையா!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3.

28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வேலூரை பூர்வீகமாக கொண்ட தக்ஷிதா ஸ்ரீ, தன்னுடைய பர்பார்மென்சால் நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

Zee Tamil channels Saregamapa little champs season 3 show Dhakshitha Sree attracts everyone

சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்த தக்ஷிதா ஸ்ரீ: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாடகர்கள் ஸ்ரீனிவாசன், கார்த்திக், அபிராமி, சைந்தவி என நடுவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆன நிலையில் தற்போது 23 போட்டியாளர்கள் களமிறங்கி வெற்றிகரமாக பங்கேற்று வருகின்றனர்.

இவர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமடைந்து வருகிறார் தக்ஷிதா ஸ்ரீ. வேலூரை பூர்விகமாக கொண்ட இவர் தனது அசாத்திய குரலால் ரசிகர்களை மட்டுமில்லாமல் நடுவர்களையும் கவர்ந்து வருகிறார். மேலும் இவர் நடுவர்கள் ஒவ்வொருவரையும் உறவுமுறை சொல்லி அழைத்து வருவது பார்ப்பவர்களையும் நடுவர்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. ஸ்ரீனி அண்ணா, கார்த்திக் சித்தப்பா, அர்ச்சனா தங்கச்சி, அபிராமி அத்தை, சைந்தவி அக்கா என எல்லாரையும் உறவுமுறையில் தான் தக்ஷிதா அழைத்து வருகிறார்.

இப்படி இவர் அனைவரையும் உறவுமுறையில் அழைப்பதற்கு காரணம் இருப்பதாக அவரது பெற்றோர், தக்ஷிதாவின் உண்மை நிலையை சரிகமப மேடையில் சோகத்துடன் பகிர்ந்துள்ளனர். இந்த பகிர்வு காண்பவர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தக்ஷிதாவின் அப்பா ஒரு மெக்கானிக், தக்ஷிதாவின் பெற்றோர் சாதிகளை புறக்கணித்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிள்ளைகளை விட ஜாதியே முக்கியம் என இரண்டு குடும்பமும் இதுவரை இவர்களை சேர்ந்து கொள்ளாமல் புறம் தள்ளியே வைத்துள்ளனர்.

தக்ஷிதாவுக்கு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என எல்லாருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் ஆசை என்றும் அவரது தந்தை பகிர்ந்துள்ளார். அந்த ஆசை இப்போது வரை நிறைவேறவில்லை என்றும் அதனால் அவள் யாரை பார்த்தாலும் உறவுமுறை சொல்லியே பழகி வருகிறாள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தக்ஷிதாவுக்கு சிறு வயதில் இருந்தே Tonsils பிரச்சனை இருப்பதாகவும் இதனால் அவளுக்கு எந்தவொரு உணவையும் ரசித்து ருசித்து சாப்பிட முடியாது, அவளுக்கு சுவையும் தெரியாது. மணமும் தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை கேட்ட பலரும் இந்த சின்ன வயதில் இப்படியோர் பிரச்சனையா என்று கண் கலங்கியுள்ளனர். தக்ஷிதா இந்த வாரம் சீனியர் -ஜூனியர் ரவுண்டில் ஷாம்லாவுடன் சேர்ந்து பூவே பூச்சூடவா என்ற பாடலை பாடி அசத்தினார். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X