மாமியாரை பார்த்து குடிக்க ஆசைப்பட்டேன்.. கணவர் ஒத்துழைக்கலை.. தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண் ஆதங்கம்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தமிழா தமிழா. விவாத நிகழ்ச்சியாக ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஆங்கர் ஆவுடையப்பனும் தன்னுடைய பங்கிற்கு அதிகரித்து வருகிறார்.
அந்த வகையில் இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. புத்தாண்டு துவங்கியுள்ள நிலையில் அதையொட்டியே இந்த வாரத்தின் தலைப்பும் காணப்பட்டது- புத்தாண்டிற்கு தன்னுடைய பார்ட்னர் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என லிஸ்ட் போடும் கணவன் -மனைவி என்பதாக இந்த வாரத்தின் தலைப்பு காணப்பட்டது.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி: நிகழ்ச்சியில் இளம் கணவன் -மனைவி அதிகமான அளவில் கலந்துக் கொண்டனர். சிலர் தங்களின் குழந்தைகளுடனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல் செக்மெண்ட்டாக தங்களின் விருப்பத்தை சிலேட்டில் எழுதி தங்களின் கணவனின் கழுத்தில் மாலையாக போட வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மனைவிமார்கள் மிகவும் உற்சாகத்துடன் அதை செயல்படுத்தினர். இப்படி எழுதப்பட்டதில் தன்னுடைய கணவன் குளிக்கவே மாட்டேன் என்கிறார் என்பதாக மனைவி ஒருவர் குறைகொட்டிக் கொண்டார். அதற்கு பதிலளித்த கணவரோ, தினந்தோறும் குளித்தால் செலவாகிவிடும் என்று கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
குடிக்கவில்லை என குற்றச்சாட்டு: மற்றொருவர் தன்னுடைய கணவனுக்கு தூங்காதே தம்பி தூங்காதே என்று பலகையில் எழுதியிருந்தார். மற்றவர்கள் தூங்குவதற்கு கஷ்டப்படும்நிலையில், படுத்தவுடன் தன்னுடைய கணவர் தூங்கி விடுவதாக அவர் அங்கலாய்த்தார். தான் லைட்டை நிறுத்திவிட்டு வருவதற்குள் அவர் தூங்கிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். பாத்ரூமில் அதிக நேரத்தை செலவழிப்பதாகவும் அங்கே நிம்மதியாக இருப்பதாக கூறுவதாகவும் மனைவி மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த 2025ம் ஆண்டில் தான் செய்ய விரும்பும் செயல்களையும் டைரியில் அவர் பட்டியலிட்டு காட்டியுள்ளார்.
கணவருடன் சரக்கடிக்க விருப்பம்: அதில் தன்னுடைய கணவன் சரக்கடிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவனுடன் இணைந்து தானும் சரக்கடித்து கேண்டில் லைட் டின்னர், அருமையான படம் என பொழுதை கழிக்க வேண்டும என்ற தன்னுடைய விருப்பத்தையும் அந்த பெண் குறிப்பிட்டார். தனக்காகத்தான் அவர் குடியை விட்டதாகவும் ஆனால் தானே விரும்பினாலும் அவர் திருமணத்திற்கு பிறகு குடிப்பதில்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளார். தன்னுடைய மாமியார் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கிளைமேட்டிற்காக அவர் ரம் அடிப்பார் என்றும் ஆனால் தன்னுடைய கணவர் தன்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் உள்ளதாகவும் அந்த பெண் மேலும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.ஆவுடையப்பன் அறிவுரை: இதை கேட்ட ஆவுடையப்பன் ரொமான்சையும் லிக்கரையும் சேர்த்து பார்க்க வேண்டாம் என்று அந்த பெண்ணிற்கு அறிவுரை செய்துள்ளார். கஷ்டப்பட்டு குடிப்பதை நிறுத்திய ஒரு மனிதனை மீண்டும் அதற்குள் தள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் ஒரு மனிதர் என்பதால் மீண்டும் அந்த பழக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் மறுபடியும் அவரை திருத்துவதும் கடினமாகிவிடும் என்றும் ஆவுடையப்பன் கூறியுள்ளார். மாமியாரை பார்த்து குடிக்க ஆசைப்பட்டதையும் குறிப்பிட்ட அவர், அவரை பார்த்து ஆசைப்பட அதிகமான விஷயங்கள் இருக்கலாம் என்றும் இது அதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











