தீபாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஐஸ்வர்யா.. கார்த்திக் கொடுத்த ஷாக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வேலைக்கு போவது அபிராமிக்கு தெரிந்து விட அடுக்கடுக்கான கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam serial December 4th episode

அபிராமி கொடுத்த தண்டனை: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தீபா நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா அவளை சும்மா விட கூடாது. நான் ஒரு பொய் சொன்ன போது எனக்கு என்ன தண்டனை கொடுத்தீங்களோ அதே தான் அவளுக்கும் கொடுக்கணும் அது தானே நியாயம் என்று பேச, அபிராமியும் ஆமாம் என்று சொல்கிறாள். ஐஸ்வர்யா நீங்க அவளை வெளியே அனுப்ப மாட்டீங்க. நான் அதை செய்கிறேன் என்று சொல்லி தீபாவை தரதரவென இழுத்து கொண்டு வருகிறாள்.

ஷாக் கொடுத்த கார்த்தி: தீபாவை வெளியே தள்ளும் போது கார்த்திக் என்ட்ரி கொடுக்க எல்லாரும் அங்கு கூடி விடுகின்றனர். கார்த்திக் என்ன பிரச்சனை என்னாச்சு என்று கேட்க, தீபா பொய் சொல்லிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கா, நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா. இவளால் பூஜை கேட்டு போச்சு என எல்லாரும் மொத்தமாக ரவுண்டு கட்டி அடிக்க கார்த்திக், தீபா எனக்கிட்ட சொல்லிட்டு தான் வேலைக்கு போகிறாள். அதுவும் நம்ம ஆபிஸில் தான் வேலை செய்கிறாள் என்று உண்மையை உடைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

என்கிட்ட சொன்னா: மேலும் அவ தம்பிக்கு உதவனும் அதுக்காக வேலைக்கு போறதாக சொல்லி மியூசிக் கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு வந்தாள், நான் தான் இன்டெர்வியூ பண்ணி அதுக்கு தகுதியானவராக இருந்ததால் வேலைக்கு எடுத்தேன் என்று சொல்கிறாள். உடனே குறுக்கிட்ட அபிராமி என்கிட்ட சொல்லல என்று பேச, அருணாச்சலம் அவ அவளுடைய புருஷன் கிட்ட சொல்லிட்டு தான் போய் இருக்கா, இது அவங்களோட தனிப்பட்ட விஷயம், அதுல நாம தலையிட கூடாது என்கிறார்.

குருஜியிடம் யோசனை: இருந்தாலும் அபிராமி ரூமில் டென்ஷனாக இருக்க அங்கு வரும் கார்த்திக் உங்ககிட்ட சொல்லாமல் விட்டது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்க அபிராமி எனக்கு அது பிரச்சனை இல்ல, பூஜை தடைபட்டு போய்டுச்சு அதான் கவலை என்று சொல்ல நான் குருஜியிடம் பேசிட்டேன், அவர் இன்னொரு நேரத்தை குறித்து கொடுத்திருக்கார் என்று சொல்லி கூல் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X