கார்த்திக் தீபாவிற்கு கொடுத்த தண்டனை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா சினேகாவை அடித்த விஷயத்தை கார்த்திக்கிடம் போட்டு கொடுக்க நல்ல பிளான் போட்டு ரூமுக்கு வருகிறார்.
இதையடுத்து, இன்று என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம்: அதாவது கார்த்திக் சினேகாவை திட்டி வெளியே அனுப்ப அவள் முகத்தை தொங்க போட்டு கொண்டு வருகிறாள். வெளியில் இருக்கும் இளையாராஜா என்னாச்சு என்று கேட்க, தீபாவை உள்ளே கார்த்திக் கூப்பிட்டதாக சொல்கிறாள். இன்னைக்கு தீபாவுக்கு பயங்கர ரைட் இருக்கு என அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.
தீபாவிற்கு கொடுத்த பனிஷ்மென்ட்: தீபா வந்ததும் கார்த்திக், நீங்க பண்ணது தப்பு, உங்களுக்கு பனிஷ்மென்ட் இருக்கு என்று சொல்லும் கார்த்திக், நீங்க ரொம்ப அழகா சிரிப்பீங்க அதனால் சிரிச்சிட்டு போங்க என்று சொல்கிறான். கார்த்திக் முதலாளியாக பேசாமல் கணவராக பேசுவதை கேட்டு தீபா ஷாக் ஆகிறாள். உடனே கார்த்திக், மனைவிக்கு பிரச்சனை என்றால் கணவன் தான் வருவான், அதோடு இனிமே ஏதாவது பிரச்சனை என்றால் என்கிட்ட சொல்லுங்க என்கிறார்.
யாருக்கும் தெரியவேண்டாம்: அதன் பிறகு வீட்டிற்கு வரும் கார்த்திக், தினமும் எதுக்கு ஷேர் ஆட்டோல ஆபீசுக்கு போகணும், என்கூடவே கார்ல வந்துடுங்க, அதான் எல்லாருக்கும் உண்மை தெரியும்ல என்று சொல்ல முதலில் தயங்கும் தீபா பிறகு ஓகே சொல்லி விடுகிறாள். அதோடு ஆபிசில் யாருக்கும் நாம கணவன் மனைவி என்று தெரிய வேண்டாம் என்று தீபா சொல்ல, கார்த்திக் ஓகே சொல்கிறான்.
சிதம்பரம் யாரு: மேலும், நீங்க ஆபிஸ்ல ஸ்லீப்பர் செல்லா இருங்க, அங்க நடக்குற விஷயங்களை எனக்கு சொல்லுங்க என்று சொல்கிறான், பிறகு இளையராஜா போன் செய்து இசை துறையில் பெரிய பிசினஸ் மேன் சிதம்பரம் பத்தி உனக்கு தெரியுமா என்று கேட்க அவரை பத்தி கேள்வி பட்டு இருக்கேன், அவரை சந்தித்து நிறைய டிப்ஸ் கேட்கனும் என்று சொல்ல அவரே உன்னை பார்க்கணும்னு சொல்லி இருக்காரு.
அப்பாயின்ட்மென்ட் புக் பண்ணவா என்று கேட்க கார்த்திக் ஓகே சொல்கிறான். மறுநாள் அவரை சந்திக்கவும் போகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் தொடரை இன்று பாருங்கள்.


Click it and Unblock the Notifications











