அனல் பறக்கும் சவாலில் ஜெயிக்கப்போவது யார்? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம். சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்தி, தீபாவிடம் நாம் இரண்டு பேரும் கணவன் மனைவி என்று ஆபிசில் தெரிய வேண்டாம் என்கிறான்.
மேலும், நீங்க ஆபிஸ்ல ஸ்லீப்பர் செல்லா இருங்க, அங்க நடக்குற விஷயங்களை எனக்கு சொல்லுங்க என்று சொல்கிறான்.

இதையடுத்து, இசை துறையில் பெரிய பிசினஸ் மேனாக இருக்கும் சிதம்பரத்தை சந்தித்து பேச கார்த்தி திட்டம் போடுகிறார். இதையடுத்து இந்த எபிசோடில் என்ன ஆனது என்று பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் சிதம்பரத்திற்காக காத்திருக்க அவர் வர எல்லாரும் அவருடன் செல்பி எடுத்து கொள்ள சிரித்த முகத்துடனே வந்து கார்த்திக்கு கை கொடுக்க ரொம்ப பண்பான மனிதரா இருக்காரு என நினைத்து கொள்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் சிதம்பரம், நீ எதுக்கு இந்த துறைக்கு வந்த? உன்னால் இங்க ஒண்ணுமே சாதிக்க முடியாது என்பது போல பேசி வில்லத்தனத்தை காட்டுகிறார் சிதம்பரம்.
ஜெயித்து காட்டுறேன்: ஆனால், கார்த்திக் திறமையானவர்களை வெளியே கொண்டு வர தான் இந்த துறைக்கு வந்ததாக சிதம்பரத்திடம் பதில் கொடுக்கிறான். இதையடுத்து ஏகத்தாளமாக பேசும் சிதம்பரம், திறமையானவர்களை வெளியில் கொண்டு வரப்போறியா.. உன்னால் ஒரு ஆல்பம் பாடலை கூட வெளியிட முடியாது என சொல்ல கார்த்திக் புது சிங்கரை வைத்து ஒரு ஹிட் பாடலை கொடுத்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான். நீ இந்த சவாலில் ஜெயித்து விட்டால் நான் இந்த துறையை விட்டே போயிடுறேன் என சிதம்பரமும் பதிலுக்கு சவால் விடுகிறார்.
அதிர்ச்சி அடைந்த அபிராமி: இருவரும் வாக்குவாதம் செய்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து அதை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டுவிடுகின்றனர். இதை பார்த்த அபிராமி குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











