கார்த்தியின் கையில் சிக்கிய கடிதம்.. ஷாக்கான ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடில் தீபா காணாமல் போக கார்த்தி கோவிலுக்கு சென்று தேடுகிறான். அங்கே பூசாரியிடம் விசாரிக்க அவர் தீபா வரவில்லை என்று சொல்ல கார்த்தி பதற்றம் அடைகிறார்.

zee tamil Karthigai Deepam serial november 14th today episode

அப்போது அங்கு வரும் மீனாட்சி, கார்த்திக்கு ஆறுதல் கூறி, நிச்சயம் தீபாவை கண்டுபிடித்து விடலாம் என்கிறார்.

கார்த்திகை தீபம்: தீபாவை எங்கு தேடியும் கிடைக்காததால், சோகத்தோடு ரூமுக்கு செல்லும் போது அங்கு ஒரு கடிதம் இருப்பதை பார்க்கிறான். அந்த கடிதத்தை எடுத்து படிக்கையில் தீபா தன்னுடைய மன நிம்மதிக்காக ஊர் எல்லையில் உள்ள கோவிலுக்கு வேண்டுதல் செய்வதற்காக செல்வதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் மீண்டும் நானே வந்து விடுவேன் என எழுதி இருக்கிறாள்.

கடும் கோபத்தில் கார்த்தி: மேலும் அந்த கடிதத்தில் நான் கொண்டு வந்த சிலையை மண்ணுக்குள் புதைக்கும் அளவிற்கு என் மீது என்ன வன்மம்? ஏன் இப்படி செய்தார்கள் என எனக்கு புரியவில்லை என எழுதி இருப்பதை பார்த்து கார்த்தி ஐஸ்வர்யா மீது மிகவும் கோபம் கொள்கிறான்.

zee tamil Karthigai Deepam serial november 14th today episode

உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று நீங்க ஏன் தீபாவுக்கு பிரச்சனை மேல பிரச்சனை கொடுத்துக்கொண்ட இருக்கிறீர்கள். உங்கள மாதிரி அவளும் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகத்தானே என கேள்வி கேட்கிறான். நீங்களும் அவளைப் போல இந்த வீட்டுக்கு வாழ தானே வந்தீங்க என ஆவேசப்படுகிறான்.

அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்ல நீங்கதான் கோவில் திருவிழாவில் தீபாவை கொலை செய்ய முயற்சி செய்தீங்க என்பதும் எனக்குத் தெரியும் என உண்மையை போட்டு உடைக்க ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். அப்போது அங்கு இருக்கும் அருண், ஐஸ்வர்யா சின்ன சின்ன தப்பு பண்ண கூடியவள் தான் ஆனால் கொலை செய்யும் முயற்சி செய்திருக்க மாட்டா என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறான்

zee tamil Karthigai Deepam serial november 14th today episode

குறி கேட்கும் அபிராபி: உடனே அங்கு வரும் அபிராமி இதில் யார் பக்கமும் நான் பேச முடியாது, அது மகன்களுக்குள் பிரச்சனையை உண்டு செய்யும். இது சாமி பிரச்சனை என்பதால் குறி கேட்கலாம் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X