தவறு செய்தது யார்.. ஐஸ்வர்யாவுக்கு ஷாக் கொடுத்த சாமியார்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா எழுதிய கடிதம் கார்த்தியின் கையில் கிடைக்கிறது.
அந்த லெட்டரைப் பார்த்த கார்த்தி ஐஸ்வர்யாவிடம் சத்தம் போட்டு, நீங்க ஏன் தீபாவுக்கு பிரச்சனை மேல பிரச்சனை கொடுத்துக்கொண்ட இருக்கிறீர்கள். உங்கள மாதிரி அவளும் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகத்தானே என கேள்வி கேட்கிறான்.

இதையடுத்து, அபிராமி இதில் யார் பக்கமும் நான் பேச முடியாது, அது மகன்களுக்குள் பிரச்சனையை உண்டு செய்யும். இது சாமி பிரச்சனை என்பதால் குறி கேட்கலாம் என முடிவெடுக்கிறாள். இதன் பின் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ரூமில் வாக்குவாதம்: ஐஸ்வர்யா ரூமுக்குள் அருணிடம் நான் எதுவும் பண்ணல எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று பேச சரி பார்த்துக்கலாம் என அருண் வாக்கு கொடுக்கிறான். மறுநாள் காலையில் எல்லோரும் கோவிலுக்கு வர அபிராமி சாமியாரிடம் சென்று பரிகாரம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சாமியார் எதிரே வருகிறார்.
பரிகாரம்: பிறகு அவரிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்க அவர் ஓலைச்சுவடியில் இதற்கான பரிகாரம் இருக்கும் என்று படித்து பார்த்து செல்வதாக சொல்லி ஓலைச்சுவடியை எடுத்து. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பூஜை ஒன்றை நடத்த வேண்டும் அந்த பூஜையில் இறுதியில் பாம்பு ஒன்று வந்து சாமி விஷயத்தில் தவறு இழைத்தவரை கொத்தும் என சொல்ல அதைக் கேட்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.
நான் தப்பு பண்ணல: பிறகு மைதிலி மற்றும் மீனாட்சி இருவரும் ஐஸ்வர்யாவிடம் வந்து நீதான் தப்பு பண்ணி இருப்பீங்கனு எங்களுக்கு நல்லாவே தெரியும் உண்மையை இப்போதாவது ஒத்துக்க பிரச்சனையை சமூகமாக தீர்த்துவிடலாம் என்று சொல்ல நான் எதுவும் தப்பு பண்ணல முடிந்தால் நிரூபித்துக் கொள்ளுங்கள் என சொல்கிறாள்.
அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி இதிலிருந்து தப்பிக்க ஐடியா கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











