கார்த்திக் கொடுத்த ஷாக்.. தீபா தப்பிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் கடந்த வாரம் கார்த்தி, ஐஸ்வர்யா மீது அடுக்கடுக்கான புகாரை கூற, அது உண்மையா என தெரிந்து கொள்ள அபிராமி பூஜை செய்கிறாள்.

இதில் இருந்து தப்பித்துக்கொள்ள ஐஸ்வர்யா பாம்பாட்டியை வைத்து கார்த்தியை கொத்த ஏற்பாடு செய்தாள். ஆனால், தன் வினையே தன்னைச்சுடும் என்பது போல, பாம்பு ஐஸ்வர்யாவை காட்டி கொடுத்துவிடுகிறது.
கார்த்திகை தீபம்: இதனால், கோபம் கொண்ட அபிராமி, ஐஸ்வர்யா பளார் என்று அடித்து விடுகிறார். மேலும், நிம்மதி தேடி வீட்டை விட்டு போன தீபா வீட்டுக்கு திரும்பி வந்துவிட கார்த்தி நிம்மதி அடைந்தார். இப்படி பரபரப்பாக கடந்த வாரம் கார்த்திகை தீபம் சீரியல் சென்ற நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு: அதாவது, ஆபிசில் ஸ்னேகா, தீபாவை பார்த்து இது நம்ம ஆபிஸ் நம்ம தான் சுத்தமா வச்சுக்கணும் என்று சொல்லி கிளீன் செய்ய சொல்கிறாள், தீபாவும் ஆபிஸை சுத்தம் செய்து கொண்டே இது நான் பாட வேண்டிய இடம் என நினைத்து தான் பாட்டு பாட அதை கார்த்திக் பார்த்து பாராட்டுவது போல கற்பனை செய்து கொள்கிறாள்.
தீபாவுக்கு வேலை: அடுத்து ஆபிஸ் வரும் கார்த்திக் வேலை செய்பவர்கள் விவரங்கள் அனைத்தையும் வாங்கி தீபா தனது பக்கத்திலேயே இருந்து வேலை செய்வது போல செய்கிறான். அதோடு இளையராஜாவிடம் பல்லவி என்ற பெண்ணுக்கு அவளுக்கான அங்கீகாரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்காக தானே, நாம் இந்த கம்பெனியை வாங்கினோம் என்று சொல்கிறான்.
அதிர்ச்சியில் தீபா: மேலும் லைன் கிளப் விழாவில் ரூப ஸ்ரீ பாட ஏற்பாடு செய்து அவரிடம் கான்ட்ராக்ட் போடுங்க என்று சொல்ல அதை கேட்டு தீபா அதிர்ச்சி அடைகிறாள், என்னை பிடிக்க என்னைய வச்சியே பிளான் போடுறாங்க என தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











