பணத்தை பார்த்ததும் மயங்கிய ரூபஸ்ரீ.. செய்வதறியாது புலம்பும் தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று, கார்த்திக் தீபாவிற்கு வேலை போட்டு கொடுத்து தனது அருகிலேயே வைத்துக்கொள்கிறான்.
லைன் கிளப் விழாவில் ரூப ஸ்ரீ பாட ஏற்பாடு செய்து அவரிடம் கான்டராக்ட் போடுங்க என்று சொல்ல அதை கேட்டு தீபா அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடிக்கிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: கார்த்திக் இளையராஜாவிடம் எப்படியாவது ரூபாஸ்ரீயை பாட்டு பாட ஒப்பு கொள்ள வைக்க வேண்டும் என்று சொல்லி அவளை சந்திக்க முகவரி கொடுத்து அனுப்புகிறான், அடுத்து ரூபாஸ்ரீ வீட்டிற்கு வரும் இளையராஜா இந்த நிகழ்ச்சி குறித்து சொல்ல கோகிலா அவங்க அம்மா ராஜஸ்ரீ கிட்ட கேட்டு தான் முடிவை சொல்ல முடியும் என தனியாக சென்று தீபாவுக்கு போன் போடுகிறாள்.
அக்ரீமெண்ட்டில் கையெழுத்து: இங்கே இளையராஜா கார்த்திக்கு போன் செய்து அவங்க யார்கிட்டயோ கேட்டு தான் சொல்ல முடியும்னு சொல்றாங்க என்று நடந்தவற்றை சொல்கிறான். தீபா கார்த்தி பக்கத்தில் இருந்ததால் கோகிலாவின் போனை எடுக்க முடியாமல் போகிறது, இந்த சமயத்தில் இந்த கச்சேரியில் பாடினால் சம்பளம் 10 லட்சம் ருபாய் என்று செக் போட்டு சொல்ல, பணத்தாசையில் இருந்த கோகிலா இதுக்கு ஓகே சொல்லி ரூபாஸ்ரீயை அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட வைத்து விடுகிறாள்.

எல்லாம் கார்த்தியின் பிளான்: பணமும் வாங்கிட்டு அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டுட்டு பாட வரலைனா பெரிய பிரச்னையாகிடும் என வார்னிங் கொடுத்து விட்டு அங்கிருந்து இளையாராஜா கிளம்பியதும் தீபா கோகிலாவுக்கு போன் செய்து இதெல்லாம் கார்த்தியின் பிளான் என்று சொல்கிறாள். ஆனால் கோகிலா அதை நம்ப மறுக்கிறாள். அதே சமயம் நீ இந்த கச்சேரியில் பாடியே ஆக வேண்டும் எனவும் ஷாக் கொடுக்கிறாள்.
அடுத்து நடக்கப்போவது என்ன: வேறுவழியில்லாமல் பாட முடிவு செய்யும் தீபா, கார்த்தியிடம் தம்பியை பார்க்க ஊருக்கு போயிட்டு வருவதாக சொல்லி கிளப்புகிறாள். ஆனால், நிலைமையை புரிந்து கொள்ளாமல் நானும் வரேன் என்று சொல்லி அதிர்ச்சிக்கு மேல் அதிர்க்கி கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











