கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்.. தர்மசங்கடத்தில் தீபா எடுத்த முடிவு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில் பல்லவியின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என பிளான் போடுகிறார் கார்த்தி.

ரூபாஸ்ரீ வீட்டிற்கு வரும் இளையராஜாவை அனுப்பி வைக்கிறார். மேலும் இந்த கச்சேரியில் பாடினால் சம்பளம் 10 லட்சம் ரூபாய் என்று சொல்ல ரூபாஸ்ரீயிடம் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டுவிடுகிறாள்.

zee tamil Karthigai Deepam serial november 22nd today episode

இன்றைய எபிசோடு: இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில், தீபா ஊருக்கு கிளம்பி வரும் போது ஒரு கோவிலுக்கு சென்று இந்த பிரச்சனையில் இருந்து நான் எப்படி வெளியே வர போறேன்னு தெரியல, நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும் என்று மனம் உருகி கடவுளிடம் வேண்டி கொள்கிறாள்.

பாடித்தான் ஆகணும்: அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோகிலா இனியனுக்கு உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டேன். அவனுடைய மருத்துவ செலவுக்காக இந்த பணத்தை வச்சிக்கோங்க என்று பணத்தை கொடுத்து தீபாவிடம் நீ வந்து பாடி தான் ஆகணும் என மிரட்ட வேறு வழியில்லாமல் பாட ஒப்பு கொள்கிறாள். வீட்டில் மீனாட்சி தீபாவுக்காக காத்திருக்க ஐஸ்வர்யா அதெல்லாம் வருவா என்று சொல்லி உள்ளே செல்கிறாள்.

கார்த்தி போட்ட பிளான்: தீபா வீட்டுக்கு வந்ததும் எங்க போயிருந்த என்று விசாரிக்க இனியனை பார்க்க ஊருக்கு போய் இருந்ததாகவும் பல்லவியை கண்டுபிடிக்க கார்த்தி போட்டிருக்கும் பிளானை பற்றியும் சொல்லி எனக்கு நீங்க தான் உதவனும் என்று கேட்கிறாள். மேலும் தீபா வேறு வழியில்லை பாடி தான் ஆகணும் என்று சொல்ல மீனாட்சி சரி பார்த்துக்கலாம் என்று சொல்கிறாள்.

அடுத்து என்னாகுமோ: அடுத்ததாக மறுநாள் கார்த்திக் வீட்டிற்கு கச்சேரிக்கு கூப்பிட நீங்க முன்னாடி போங்க, மீனாட்சி அக்கா கூட நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்த கார்த்திக் கோகிலா போட்டிருக்கும் செட்டப்பை பார்த்து பல்லவி பாட போகும் இடம் இது தான் என்பதை உறுதி செய்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X