கார்த்திக்கிடம் வசமாக மாட்டிய ரூபாஸ்ரீ.. அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றை எபிசோடில் பல்லவியை கண்டுபிடிக்க கார்த்தி போட்டிருக்கும் பிளானை நினைத்து தீபா கவலைப்படுகிறாள்.
கச்சேரி நடக்கும் இடத்திற்கு கார்த்திக் கிளம்பி வந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

தீபா ஓவரா பண்ற: கார்த்திக் கச்சேரி நடக்கும் மேடையை கோகிலா வடிவமைத்திருக்கும் விதத்தை பார்த்து பல்லவி பாட போகும் இடத்தை உறுதி செய்து கொள்கிறான், மறுபக்கம் கோகிலாவும் ரூபாஸ்ரீயும் காரில் வந்து கொண்டிருக்கும் போது இந்த முறை தீபா ரொம்ப ஓவரா குடைச்சல் கொடுக்கிறாள், இதெல்லாம் கார்த்தியின் ஏற்பாடுன்னு வேற பொய் சொல்றா என்று பேசி கொண்டு வருகிறாள்.

நிம்மதி அடைந்த ரூபாஸ்ரீ: ரூபாஸ்ரீ,தீபா வந்துடுவா தானே என்று கேட்க அதெல்லாம் கண்டிப்பாக வந்துடுவா என்று சொல்லி தீபாவுக்கு போன் போட அவள் அங்க தான் வந்துட்டு இருக்கேன் என்று சொல்ல இதைக்கேட்டு இருவரும் நிம்மதி அடைகின்றனர். அதன் பிறகு இளையராஜா கோகிலாவுக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க அவர்கள் நாங்கள் வந்துகிட்டே இருக்கோம் என்று சொல்லிவிட்டு போனை வைக்கின்றனர்.

இன்றைய எபிசோடு: பிறகு இவர்கள் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து இறங்கியதும் கோகிலா எனக்கு ஜூஸ் வேண்டும் என்று கேட்க எல்லாமே உள்ளவே இருக்கு என்று சொல்லி அவளை அழைத்து செல்கின்றனர். கார்த்திக் அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் இந்த அம்மா வெளியே எங்கயும் போகாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வைக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











