கார்த்தியின் மாஸ்டர் பிளான் சக்ஸஸ்.. தீபா வைத்த ட்விஸ்ட் என்ன? கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கச்சேரி நடக்கும் இடத்திற்கு கார்த்தி வந்து விட தீபா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
மறுபக்கம் தீபாவும் மீனாட்சியும் பேசிக் கொண்டிருக்கும் போது வந்த கார்த்தி, பல்லவி யார் என்பதை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று இருந்ததால், தீபா என்ன செய்வது என்று தெரியாமல் டென்ஷனாக நின்றாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடிலும் நாளைய எபிசோடிலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
என்னை காப்பாத்துங்க: கோகிலா இந்த விஷயத்தில் இருந்து தப்பிக்க கார்த்திக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடலாம் என பிளான் போட ரூபா ஸ்ரீ எதையாவது பண்ணி என்னை காப்பாத்துங்க என சொல்கிறார். பிறகு நீங்க மேடை ஏறுங்க டைம் ஆயிடுச்சு என இளையராஜா ரூபஸ்ரீயை மேடைக்கு ஏற்றி விடுகிறான்.
ஜூஸில் மயக்க மருந்து: மறுபக்கம் தீபா எப்படிக்கா நான் முன்னாடி போய் பார்ப்பது என மீனாட்சியிடம் புலம்ப கார்த்திக்கு இங்கு நடக்கிறது எல்லாமே தெரியும். ஆனா உக்காந்துட்டு இருக்க இடத்தை விட்டு எழுந்திருக்க முடியாது அது மாதிரி என்கிட்ட ஒரு மாத்திரை இருக்கு அதை கொடுத்து விடலாம் என்று சொல்ல தீபா வேண்டாம் என மறுக்க மீனாட்சி மைண்ட் வாய்ஸில் மன்னிச்சிடு தீபா உன்ன காப்பாத்த வேற வழியில்லை என சொல்கிறாள்.
மயங்கிய மீனாட்சி: அடுத்ததாக கோகிலா பேரரிடம் ஜூஸில் மாத்திரையை கலந்து அதை கார்த்திக்கிடம் கொடுக்க சொல்ல ஜூஸூம் கார்த்திக் கைக்கு வந்து விடுகிறது. அவன் குடிக்க போகும் சமயத்தில் மீனாட்சி ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் அதை வாங்கி குடிக்க மீனாட்சி கார்த்திக்கிடம் இருந்து ஜூசை வாங்கி குடித்து விடுகிறாள்.
என் தனிப்பட்ட விஷயம்: இதனால் மீனாட்சி கொஞ்சம் மயங்கி உட்கார்ந்து விட தீபா மேடைக்கு பின்புறமாக சென்று பாட கார்த்திக் அங்கு சென்று திரையை விலக்கி பார்க்க முயன்ற போது, அங்கு இருந்த தீபா வேண்டாம் என தடுத்து விடுகிறார். கார்த்திக் உங்களுக்கு உதவி செய்ய தான் வந்திருப்பதாக சொல்ல வேண்டாம் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என சொல்லி விடுகிறாள்.
மியூசிக் கம்பெனியில் பாடணும்: இதனால் கார்த்திக் அப்படி என்றால் எனக்கு நீங்கள் ஒரு வாக்கு கொடுக்கணும் என உங்களுக்காக தான் நான் புதுசா ஒரு மியூசிக் கம்பெனி வாங்கி இருக்கேன் அங்க நீங்க வந்து கண்டிப்பா பாடணும் என சொல்ல தீபா தற்போது இதிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை என்ற காரணத்தினால் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











