செம ட்விஸ்ட்.. மருதாணியால் மாட்டிக் கொள்ளும் தீபா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கு தீபா பால் கொண்டு வந்து கொடுக்க அவள் கையில் இருந்த மருதாணியை, கார்த்திக் பார்க்காமல் விட்டுவிடுகிறான்.
அந்த மருதாணியை பார்த்து இருந்தால், பல்லவியும் தீபாவும் ஒன்னுதான் என்ற சீரியலின் ட்விஸ்ட் உடைந்து இருக்கும்.

ஆனால், தீபா கார்த்திக்கு பால் கொண்டு வந்து கொடுக்க பல்லவி கையில் இருந்த மருதாணியை பார்க்காமல் தவறவிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இன்றைய எபிசோடு: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், மறுநாள் காலையில் தீபா கார்த்திக்கிடம் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க அவன் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இருவரும் கோவிலுக்கு வருகிறார்கள். கோவிலுக்கு வந்த இவர்கள் கைரேகை பார்ப்பவரை பார்த்து ஜோசியம் கேட்கலாம் என்று அவரிடம் செல்ல முதலில் கார்த்திக் தனது கையை காட்டுகிறான்.

நினைச்சது நடக்கும்: நீங்க ஒரு விஷயத்தை தேடிக்கிட்டு இருக்கீங்க கைக்கு எட்டினது கைநழுவி போயிடுச்சு என்று சொல்ல பல்லவி பற்றி சொல்றாங்களோ என நினைத்துக் கொள்கிறார். அதோடு கவலைப்படாதீங்க நீங்க நெனச்சது உங்கள நோக்கி வரும் எனவும் சொல்லி முடித்த பிறகு தீபா தன்னுடைய கையை காட்டுகிறாள். அப்போது கார்த்திக் தீபாவின் கையை பார்க்க அவளின் கையில் இருக்கும் மருதாணியை கவனித்து விடுகிறான்.
குழம்பும் கார்த்திக்: பல்லவி கையில் இருந்ததும் இதே மருதாணி தானே என்ற குழப்பம் கார்த்திக்கு எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











